ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பி.சி.சி.ஐ – எத்தனை கோடிகள் தெரியுமா?

IND BCCI
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணியானது லீக் சுற்றுப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றது. அதன் பின்னர் சூப்பர் போர் சுற்றுக்கு முதல் அணியாக குருப் ஏ பிரிவிலிருந்து தகுதி பெற்ற இந்திய அணியானது :

இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பி.சி.சி.ஐ :

சூப்பர் போர் சுற்றிலும் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. பின்னர் துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

- Advertisement -

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து மூன்று முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி மூன்று முறையும் அவர்களை எளிதாக வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்திய அணி இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் கோப்பையை வென்றது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி பெற்ற இந்த மிகப்பெரிய வெற்றி வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும் விதமாக மாறியுள்ளது. இந்நிலையில் 2025 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ சார்பில் மிகப்பெரிய ஒரு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது : இந்திய அணியின் இந்த வெற்றி மிகச்சிறப்பான ஒன்று. ஆசிய கோப்பை தொடரினை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு 21 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : இத்தனை வருஷமா நான் கிரிக்கெட் விளையாடி கத்துக்கிட்டது இதுதான் – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

இந்த பரிசு தொகையானது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்கள், ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பிரமாதமான வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என பிசிசிஐ அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement