பாகிஸ்தானை போல இந்தியாவால் ஏன் பாஸ்ட் பவுலர்களை உருவாக்க முடியவில்லை – சோயப் அக்தர் விளக்கம்

Akhtar
- Advertisement -

பொதுவாகவே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் போன்ற உலகை ஆளக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. அந்த காலத்தில் சுனில் கவாஸ்கர் தொடங்கி பிற்காலத்தில் சச்சின் டெண்டுல்கர் முதல் தற்போது விராட் கோலி வரை உலகத்தரம் வாய்ந்த எண்ணிலடங்காத பேட்டிங் வீரர்களை இந்த உலகத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கி காட்டியது.

Shoaib-Akhtar-Sachin-Tendulkar

- Advertisement -

அதேபோல் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின் என தரமான சுழல்பந்து வீச்சாளர்களையும் உலகிற்கு பறைசாற்ற இந்தியா தவறியதில்லை. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் என வரும்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கை விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே இருந்தார்கள்.

பாகிஸ்தானின் பாஸ்ட் பவுலிங் :
கபில் தேவ், ஜவகள் ஸ்ரீநாத், ஜஹீர் கான், தற்போது ஜஸ்பிரித் பும்ரா, ஷமி என ஒரு சில மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இந்தியா கிரிக்கெட்டில் ஜொலித்தார்கள். அதிலும் ஜஹீர் கான் தவிர இந்திய கிரிக்கெட்டில் இதுநாள் வரை ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் கூட சொல்லும்படியாக இல்லை.

ஆனால் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அப்போது முதல் இப்போது வரை தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை. வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், சோயப் அக்தர், முகமத் அமீர், ஷாஹீன் அப்ரிடி போன்ற பல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகினார்கள். மொத்தத்தில் வேகப்பந்து வீச்சு என வரும் போது பாகிஸ்தான் அளவுக்கு இந்தியா இல்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உண்மையாகும்.

- Advertisement -

இருப்பினும் சமீப காலங்களாக இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகம்மது சிராஜ் என இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி உலகத்தரம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. அதன் காரணமாகவே நவீன கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்த அணியாக இந்தியா சாதனை படைத்து வருகிறது.

India Vs Pakistan

காரணம் என்ன :
இந்நிலையில் பாகிஸ்தான் அளவுக்கு இந்தியாவில் ஏன் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக முடியவில்லை என பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். இதுபற்றிய காரணம் பற்றி தனது யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது.

- Advertisement -

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. இந்தியா நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குகிறது. ஆனால் அரிதான சக்தி, முகத்தில் உள்ள ஆக்ரோஷம், உன்னை கொன்று விடுவேன் என எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக்கூடிய அணுகுமுறை போன்ற அம்சங்களில் இந்திய வேகப்பந்து வீச்சு தடுமாறுகிறது. எங்களின் ரோல் மாடல், எங்களின் உணவு, எங்களின் அணுகுமுறை போன்றவைகளுடன் என்னைப்போன்ற மிகுந்த எனர்ஜியுடன் பந்துவீச கூடியவர்கள் உள்ளோம். இது போன்றவை எங்களுக்கு இன்னும் அதிவேகமாக பந்து வீச தேவையான உத்வேகத்தை அளிக்கிறது” என கூறியுள்ள சோயப் அக்தர் பாகிஸ்தான் வீரர்களிடம் உள்ள உணவு பழக்க வழக்கங்கள் உட்பட பல அம்சங்கள் இந்திய வீரர்களிடம் அதிகமாக காணப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

shoaib akhtar sachin tendulkar

மாமிச உணவுகள்:
“நீங்கள் (இந்தியா) என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற முடிவுகளில் இருக்கிறீர்கள், சரிதானே. ஆனால் எங்கள் நாட்டில் அதிகப்படியாக மாமிச உணவுகளை உட்கொள்வதால் இறுதியில் நாங்களும் மிருகங்களை போல பலத்தை பெறுகிறோம். அதனால் வேகப்பந்து வீச்சாளர்களான நாங்கள் சிங்கத்தை போல ஓடி வந்து பந்து வீசுவோம்”

இதையும் படிங்க : இந்திய மூவர்ண கொடியுடன் கூடிய அணியின் லோகோவை வெளியிட்ட லக்னோ அணி – வைரலாகும் புகைப்படம்

என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள சோயப் அக்தர் பாகிஸ்தானில் அதிகப்படியான மாமிச இறைச்சி உணவுகளை உண்ணுவதாலேயே தங்கள் நாடு அதிகப்படியான தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதாக கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற சர்ச்சையான பேச்சுக்கள் இன்றும் கூட நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement