Facebook Instagram
  • Home
  • ஐ.பி.எல்
  • இந்திய கிரிக்கெட்
  • டி20
  • கபடி
Search
Cric Tamil Logo Cric Tamil
Cric Tamil Logo Cric Tamil Logo
  • Home
  • ஐ.பி.எல்
  • இந்திய கிரிக்கெட்
  • டி20
  • கபடி
Home கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil ஐ.பி.எல் இந்திய மூவர்ண கொடியுடன் கூடிய அணியின் லோகோவை வெளியிட்ட லக்னோ அணி – வைரலாகும் புகைப்படம்

இந்திய மூவர்ண கொடியுடன் கூடிய அணியின் லோகோவை வெளியிட்ட லக்னோ அணி – வைரலாகும் புகைப்படம்

By
Siva
-
Jan 31, 2022, 09:14PM IST
Lucknow
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 15-வது ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த 15 வது சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டன. குறிப்பாக இந்த தொடருக்காக புதிதாக இணைந்த லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த 3 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

lucknow 1

- Advertisement -

அதன்படி சஞ்சீவ் கோயங்கா உரிமையாளரான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுலும், ஆல்-ரவுண்டராக மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஸ்பின் பவுலராக ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளது. அதேபோன்று அந்த அணியின் பெயரையும் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் என்றும் அணியின் பெயரையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்த புதிய லக்னோ அணியானது தங்களது அணியின் லோகோவை இன்று மாலை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டது.

Here’s the story behind our identity. 🙌#LucknowSuperGiants #IPL pic.twitter.com/4qyuFeNgsR

— Lucknow Super Giants (@LucknowIPL) January 31, 2022

அவர்கள் பகிர்ந்த இந்த புகைப்படமானது வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள இந்த லோகோவில் முக்கியத்துவம் வாய்ந்த கருடனை அடிப்படையாகக் கொண்டு இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறங்களையும் கொண்டு அந்த கருடப் பறவை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : போன வருஷம் ஐ.பி.எல் அப்போவே கோலி என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு – ரிக்கி பாண்டிங் பகிர்வு

அதோடு அணியின் பெயரையும் சேர்த்து இடையில் ஒரு கிரிக்கெட் பேட் இடம்பெற்றுள்ளது போன்ற அமைப்புடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
  • TAGS
  • IPL 2022
  • Logo
  • Lucknow SuperGiants
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Siva

    RELATED ARTICLESMORE FROM AUTHOR

    Hardik Pandya and Suryakumar Yadav
    ஐ.பி.எல்

    ஹார்டிக் பாண்டியாவோடு சேர்ந்து வெளியேறும் மற்றொரு நட்சத்திர வீரர் – வெளியான தகவல்

    Rishabh Pant
    ஐ.பி.எல்

    டிரேடிங் முறையில் டெல்லி அணிக்கு சென்ற பின்னர் 3 வார்த்தைகளில் ரிப்ளை கொடுத்துள்ள – ரிஷப் பண்ட்

    Michael Vaughan and Pandya
    ஐ.பி.எல்

    கே.கே.ஆர் அணி ஹார்டிக் பாண்டியாவை வாங்க நெனச்சா இதை செய்ஞ்சா போதும் – மைக்கல் வாகன் கொடுத்த ஐடியா

    விளம்பரம்

    சமூக வலைத்தளம்

    173,445FansLike
    6,500FollowersFollow
    1,600SubscribersSubscribe

    Popular category

    • இந்திய கிரிக்கெட்23740
    • ஐ.பி.எல்10249
    • உலக கிரிக்கெட்4680
    • உலகக் கோப்பை 20231291
    • ஆசிய கோப்பை816

    விளம்பரம்

    - Advertisement -
    Logo Footer
    ABOUT US
    We provide latest cricket news in Tamil language. Read More..

    Privacy Policy

    Terms and Condition

    Our Network

    Dheivegam
    Recipes Hindi
    Contact us: [email protected]
    FOLLOW US
    Facebook Instagram
    • Ethics Policy
    • Corrections policy
    • Editorial Board Info
    • Ownership & funding information
    • Contact Us
    © crictamil.in