போன வருஷம் ஐ.பி.எல் அப்போவே கோலி என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு – ரிக்கி பாண்டிங் பகிர்வு

Ponting
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்து விலகினார். அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவரது ஒருநாள் கேப்டன்சியையும் பிசிசிஐ பறித்தது. அதற்கடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் தனது கேப்டன் பதவியை துறந்தார். இதன் காரணமாக விராட் கோலியின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் இந்த விடயம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

Kohli-1

- Advertisement -

அதோடு விராட் கோலியின் இந்த பதவி விலகல் விவகாரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் காரசாரமாக எழுந்தன. இந்நிலையில் விராட் கோலியின் பதவி விலகல் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலியின் இந்த பதவி விலகல் தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் அவர் ஏற்கனவே தன்னிடம் பேசியிருந்தார் என்று தற்போது ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது விராட் கோலி பதவி விலகுவது குறித்து என்னிடம் வந்து பேசினார். அப்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து தான் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக இருக்க விரும்புகிறேன் என்று கோலி கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணி விராத் கோலியின் தலைமையில் பல விடயங்களை சாதித்திருக்கிறது.

Kohli-angry

விராட் கோலி இந்திய அணியை மிகவும் நேசித்தார். அவர் மைதானத்தில் விளையாடுவதை ஒரு மணி நேரம் பார்த்தாலே அவர் கிரிக்கெட் மீது எவ்வளவு ஆர்வம் வைத்திருக்கிறார் என்பது நமக்கு புரிந்துவிடும். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது அவ்வளவு சாதாரணமான விடயம் கிடையாது. ஏனெனில் இந்தியர்கள் அனைவரும் கிரிக்கெட்டை உயிர் போன்று நேசிக்கின்றனர். எனவே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு கூடுதல் பொறுப்பு அதிகம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் தான் அவருக்கு கெடச்ச கடைசி வாய்ப்பு – சீனியர் வீரரை எச்சரித்த கவாஸ்கர்

விராட் கோலி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளிலும் அட்டகாசமான வெற்றிகளை பெற்றுள்ளது. அவர் கேப்டன் பதவியிலிருந்து வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தாலும், பல சாதனைகளைப் படைத்த பிறகே அவர் தற்போது விலகியுள்ளார் என்று ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement