
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரரான ஷிவம் தூபேவிற்கு இடம் கிடைத்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய ஷிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். டி20 உலகக்கோப்பையில் விளையாடியதில் இருந்து அவருக்கு தொடர்ந்து டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அதேவேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான அணியை பொறுத்தவரை அவருக்கு இன்னும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா ஓய்வு எடுத்துக்கொண்டதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் போது பந்துவீச்சில் 1 விக்கெட் எடுத்ததோடு பேட்டிங்கில் 25 ரன்கள் எடுத்திருந்தார். ஆனாலும் போட்டியின் இறுதியில் 1 ரன் தேவை என்கிற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி எளிதில் வெற்றிபெற வேண்டிய அந்த போட்டி டை ஆனது.
அதேபோன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அவர் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனாலும் அந்த போட்டியில் விக்கெட் எடுக்கவில்லை. அதேபோன்று பேட்டிங்கில் களமிறங்கிய அவர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது போட்டியில் அவர் விளையாட இருக்கிறார்.
இனியும் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்கவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காணலாம். அந்தவகையில் இன்றைய கடைசி போட்டியில் நிச்சயம் அவர் பேட்டிங்கில் குறைந்தது 50 ரன்களாவது அடிக்க வேண்டும். அதேபோன்று பந்துவீச்சில் குறைந்தது 5 ஓவர்களாவது வீசி 1 அல்லது 2 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு விளையாட தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கனும்ன்னா.. இதை செய்யனும்ன்னு ரோஹித் சொல்லிருக்காரு.. ஓஜா பேட்டி
அப்படி அவரால் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றால் நிச்சயம் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து வெளியேற்றப்படுவார். ஆனாலும் டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் நிரந்தர இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.