
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியானது 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்திய அணி நேற்று விளையாடிய ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அடித்து நொறுக்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 256 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 55 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 50 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 72 ரன்கள் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஜிம்பாப்வே அணியும் தங்களால் முடிந்தவரை போராடிய விதம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் துபே சர்வதேச டி20 உலககோப்பை போட்டிகளில் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்கு தள்ளி அசத்தல் சாதனையை நிகழ்த்திய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ
சர்வதேச டி20 உலககோப்பை போட்டிகளில் முதல் இரண்டு ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியின் போது 2 ஓவர்களை வீசிய ஷிவம் துபே 46 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.