பாண்டியாவிற்கு மாற்றுவீரர் நான்தான். என்னை மீண்டும் நிரூபிப்பேன் – இளம்வீரர் சவால்

Pandya

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் என ஹர்டிக் பாண்டியா கடந்த சில மாதங்களாக முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். மேலும் முதுகில் ஏற்பட்ட அந்த காயத்திற்கு லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது ஓய்வு முடிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Pandya-1

காயத்தில் இருந்து மீண்ட பாண்டியா நியூசிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில் விளையாட காத்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா காயமடைந்த இந்த காலகட்டத்தில் இந்திய அணிக்கு சிவம் துபே அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேனான இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஷிவம் துபே சிக்ஸர் அடிப்பது ஹர்டிக் பண்டியாவுக்கு இணையாக உள்ளது. ஷிவம் துபே பாண்டியாவின் இடத்திற்கு சரியான நபர் என்று இந்திய அணி கருதி வருகிறது. இந்நிலையில் நான் இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே வந்துள்ளேன். ஹார்டிக் பாண்டியாவிற்கு போட்டியாக என்னை நினைக்கவில்லை. என்னுடைய திறமையை வேறு என்று பேட்டி எல்லாம் கொடுத்து இருந்தார்.

dube

தற்போது 5 ஆம் தேதி இலங்கை டி20 அணிக்கு அவர் தேர்வாகி இருப்பதால் இந்த தொடரிலும் சாதித்துக் காட்டுவேன் என்பதுபோல தன்னுடைய கருத்தை வைத்துள்ளார் ஷிவம் துபே. மேலும் பாண்டியா அணிக்கு திரும்பும் வரை அவர் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியாவிற்கு சமமான வீரராக துபே இன்னும் அணியில் நீடிக்கவில்லை என்றாலும் அதற்கான அறிகுறிகள் அவரிடம் இருப்பதாகவே அணி நிர்வாகம் அவரை தேர்வு செய்து விளையாட வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -