- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்ட ஷிவம் துபே – விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான போட்டிகளுக்குமான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வரும் வேளையில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

தரவரிசையில் ஷிவம் துபே கண்ட முன்னேற்றம் :

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் சையிம் அயூப் தனது முதல் இடத்தை தவறவிட்டு இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளார். இந்த ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனான சிக்கந்தர் ராசா 294 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சையிம் அயூப் 281 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா 272 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் இந்த டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷிவம் துபே ஒன்பதாவது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்திற்கு சென்றுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய வேளையில் ஷிவம் துபே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி வெற்றிபெற ஹார்டிக் பாண்டியாவுக்கு இந்த பிரமோஷன் தாங்க – அணில் கும்ப்ளே கருத்து

குறிப்பாக போட்டியின் கடைசி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஒரு ஒவ்வொரு போட்டியிலுமே பந்துவீசி வருகிறார். இதன் காரணமாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறந்து விளங்குவதால் அவர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -