இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றின் போது தென்னாப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு அரையிறுதி சுற்றிக்கு செல்லும் வாய்ப்பினையும் கடினமாக மாற்றியுள்ளது.
ஹார்டிக் பாண்டியாவுக்கு பிரமோஷன் தாங்க : அணில் கும்ப்ளே
ஏனெனில் அடுத்ததாக வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும். அப்படி இல்லையென்றால் சூப்பர் 8 சுற்றோடு இந்திய அணி வெளியேற வேண்டும் ஒரு சூழலில் தற்போது இருந்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் என்கிற இலக்கினை துரத்துகையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பேட்டிங் ஆர்டர் பெரியளவில் பிரகாசிக்காதது தான் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே தற்போதைய டி20 அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு அனுபவ ஆல்ரவுண்டரை முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறக்க வேண்டும் என்றும் அப்படி களமிறக்கினால் தான் இந்திய அணிக்கு அது நல்லது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஹார்திக் பாண்டியா பின் வரிசையில் தான் பேட்டிங் செய்ய வருகிறார்.
இதையும் படிங்க : இந்த ஒரு சம்பவம் நடந்தா சூரியகுமார் யாதவின் கேப்டன்சி முடிவுக்கு வந்துடும் – மைக்கல் வாகன் எச்சரிக்கை
ஆனால் அவரைப் போன்ற ஒரு அனுபவ வீரர் நான்காவது இடத்தில் அல்லது ஐந்தாவது இடத்தில் களமிறங்கி விளையாட வந்தால் அழுத்தமான வேளைகளிலும் அவர் மிகச் சிறப்பாக கையாண்டு போட்டியை வெற்றிக்கு நோக்கி அழைத்துச் செல்வார். எனவே அவரைப் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வீரரை அழுத்தமான வேளைகளில் முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என அனில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.



