சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருந்தது.
சூரியகுமார் யாதவை எச்சரித்த : மைக்கல் வாகன்
அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுமோசமான தோல்வியை சந்தித்தது.
இதன் காரணமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் கடினமாக மாறியுள்ளது. அடுத்ததாக நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்தால் அவர் கேப்டனாக தொடர்வது கடினம் என முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டனான மைக்கல் வாகன் அவரை எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இதையும் படிங்க : வெற்றி பெற்றதோடு சேர்த்து முதல் கேப்டனாக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ஹாரி புரூக்
சூரியகுமார் யாதவுக்கு இந்த டி20 உலக கோப்பை தொடரானது மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. ஏனெனில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் அவர் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பினை இழக்கும் பட்சத்தில் அவர் கேப்டனாக நீடிக்க மாட்டார் என்று நம்புவதாக மைக்கல் வாகன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



