நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 45-வது போட்டியானது நேற்று இலங்கையில் உள்ள பல்லகல்லே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.
சதம் அடித்து சாதனை நிகழ்த்திய ஹாரி புரூக் :
பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர் கொண்டு 19.1 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டனான ஹாரி புரூக் 100 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி இந்த போட்டியில் 100 ரன்களை அடித்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் டி 20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 உலக கோப்பை போட்டிகளில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை ஹாரி புரூக் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக டி20 உலககோப்பை போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரராக கிரிஸ் கெயில் 98 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சென்னையில் இருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு திரும்பிய ரிங்கு சிங் – என்ன காரணம்?
இந்த டி20 உலககோப்பை தொடரின் கடைசி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியானது பிப்ரவரி 27-ஆம் தேதி அன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டி கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



