டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சு தேர்வு. இந்திய அணியில் புதிய வீரர் அறிமுகம் – யாருன்னு பாருங்க

Dube

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று டெல்லி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.

IND-vs-BAN

காற்று மாசுபட்டால் போட்டி நடக்குமா ? நடக்காதா ? என்று சந்தேகம் இருந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் முகமதுல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் விளையாட தயாராகிவிட்டன.

சிறிது நேரத்திற்கு முன்பு டாஸ் போடப்பட்டு டாஸில் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது இந்தியபேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் புது வீரராக ஷிவம் துபே இந்த போட்டியில் அறிமுகம் ஆகிறார் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார்.

மிதவேகப்பந்துவீச்சு மற்றும் இடதுகை பேட்டிங் செய்யும் ஆல்ரவுண்டரான இவர் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சில தினங்களுக்கு முன்பு அணியில் இடம் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்டிக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஷிவம் டுபே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -