RR vs PBKS : 18 ஆவது ஓவரிலேயே முடிச்சிருக்கணும் ஆனா மிஸ் ஆயிடுச்சி – ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஹெட்மயர்

Hetmyer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66-வது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

Padikkal and Jaiswal

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 187 ரன்களை குவித்தனர். பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 12 ரன்களுக்கே முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இருப்பினும் ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் ஆகியோரது அரை சதம் காரணமாக அந்த அணி நல்ல நிலையை எட்டியது. இருப்பினும் இடையில் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறியதும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

Hetmyer 1

அவ்வேளையில் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரன் ஹெட்மயர் 28 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 46 ரன்கள் குவித்து அணியை கிட்டத்தட்ட வெற்றிக்கு அழைத்துச் சென்று இறுதி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியும் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசிய ஹெட்மயர் கூறுகையில் : இந்த போட்டியை நான் 18-வது ஓவரிலேயே முடிக்க நினைத்தேன். ஆனால் இடையில் போதுமான அளவு பந்துகளை நான் சந்திக்க முடியாமல் போனது. அப்படி போதுமான பந்துகள் கிடைத்து இருந்தால் எவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை முடித்து இருக்க முடியுமா அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்திருப்பேன்.

இதையும் படிங்க : RR vs PBKS : ஒரு கிரிக்கெட்டரா எல்லாருக்கும் இந்த ஆசை இருக்கும். அதுதான் எனக்கும் இருக்கு – ஆட்டநாயகன் தேவ்தத் படிக்கல்

இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் திருப்தி அளித்தாலும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்காமல் வெளியேறியதில் சற்று வருத்தம் தான். இருப்பினும் இறுதியில் எங்கள் அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி என ஹெட்மயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement