எனக்கு சக்தி எங்கிருந்து கிடைக்குதுன்னு தெரியல. ஆனா அடித்து நொறுக்க முடியுது – மே.இ வீரர் தில்லான பேட்டி

Wi
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 15 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் இளம் வீரர் ஹெட்மயரின் ஆட்டம் அமைந்தது. மொத்தம் 106 பந்துகளை சந்தித்த அவர் 139 ரன்கள் குவித்தார். 11 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். மேலும் அந்த போட்டியில் அவரே ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார் என்பது குறிப்பித்தக்கது.

அந்த போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ஹெட்மையர் கூறியதாவது : எனக்கு எங்கிருந்து சக்தி கிடைக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அடிக்க வேண்டிய பந்துகளை பலமாக அடிக்க நினைக்கிறேன் அது என்னால் முடிகிறது. இந்த சதம் எனக்கு நிறையவே சிறப்பானது இந்த ஆண்டின்இறுதியில் சதம் அடித்து துவக்கியது சிறப்பான ஒன்றாக நினைக்கிறேன். எனது இந்த அதிரடியை தொடர விரும்புகிறேன்.

Hetmyer 1

ஏனெனில் வரும் ஆண்டுகளில் என்னுடைய ஆட்டம் சிறப்பாக அமைய இது ஒரு தொடக்கமாக இருக்கும். எப்போதும் அணி வெற்றி பெற்ற பிறகு அந்த சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த முறை இந்தியாவில் நான் சதம் அடித்த போது அந்த போட்டியில் நாங்கள் தோற்று இருந்தோம் ஆனால் இந்த முறை வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஹெடமையர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மாற்று வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 ஆவது போட்டி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் கருத்தியுள்ளதால் நாளைய போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

Advertisement