ராஜஸ்தான் அணியிலிருந்து திடீரென வெளியேறிய முக்கிய வீரர், மீண்டும் வருவாரா? – முழு விவரம் இதோ

RR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகளுடன் லீக் சுற்று போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளால் பின்னடைவை சந்தித்த மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ள நிலையில் எஞ்சிய 8 அணிகளும் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கடும் போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது.

Chahal RR 5 For

- Advertisement -

தற்போதைய நிலைமையில் அந்த அணிக்கான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியான நிலையில் எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் தாராளமாக அதுவும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் 2008இல் வரலாற்றின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற பின் அடுத்த கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் அந்த அணி இம்முறை எப்படியாவது கோப்பையை முத்தமிடும் முனைப்பில் விளையாடி வருகிறது.

பினிஷர் ஹெட்மயர்:
அந்த அணியின் இந்த தொடர் வெற்றிகளுக்கு பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், சஹால், அஷ்வின் ஆகியோர் துருப்புச் சீட்டாக செயல்பட பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் ஒவ்வொரு போட்டியிலும் ரன் மழை பொழிந்து வெற்றிகளையும் எளிதாக்குகிறார். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் போன்ற முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக ரன்களை எடுக்க தடுமாறும் நிலையில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சிம்ரோன் ஹெட்மையர் ஒவ்வொரு போட்டியிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து நிறைய போட்டிகளை வெற்றிகரமாக பினிஷிங் செய்து வெற்றியை உறுதி கொடுத்து வருகிறார்.

Ashwin Hetmayer

நேற்றைய பஞ்சாப்புக்கு எதிரான போட்டியின் போது கூட 190 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் 141/3 என்ற இக்கட்டான சூழ்நிலையில் தவித்தபோது களமிறங்கிய அவர் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு 31* (16) ரன்கள் குவித்து அதிரடியான பினிஷிங் செய்தார். அந்த வகையில் இந்த வருடம் இதுவரை 11 போட்டிகளில் களமிறங்கிய அவர் 291* ரன்களை 72.75 என்ற அபார பேட்டிங் சராசரியில் 166.29 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து ராஜஸ்தானின் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

வெளியேறிய ஹெட்மயர்:
இப்படி ராஜஸ்தான் வெற்றி நடைபோட்டு நாக்-அவுட் சுற்றை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நேற்றைய பஞ்சாப்புக்கு எதிரான போட்டியை முடித்து விட்டு திடீரென சிம்ரோன் ஹெட்மையர் தனது தாயகமான வெஸ்ட்இண்டீசுக்கு திரும்பியுள்ளார். அவரின் மனைவி இன்னும் ஒரு சில நாட்களில் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க உள்ளதால் அந்த சிறப்பான தருணத்தின் போது அவருடன் இருக்க நினைத்த ஹெட்மையர் அதற்காக ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் அனுமதியைப் பெற்று தாயகம் திரும்பியுள்ளார்.

இது பற்றி ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது பின்வருமாறு. “இன்று காலை தனது குழந்தை பிறப்பையொட்டி சிம்ரோன் ஹெட்மையர் கயானா நகருக்கு உடனடியாக புறப்பட்டு சென்றார். அவருக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம்.

- Advertisement -

மேலும் அவருக்கு அவரின் மனைவி நிர்வாணிக்கும் எங்களது மனதார வாழ்த்துக்கள். குழந்தை பிறப்பிற்கு பின்பு அவர் மும்பைக்கு திரும்பி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் எஞ்சிய ஐபிஎல் 2022 தொடரில் பணியாற்றுவார். ஆல் தி பெஸ்ட் ஹெட்டி, அடுத்த முறை உங்களை ஒரு தந்தையாக வரவேற்க காத்திருக்கிறோம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதையும் படிங்க : மலிங்கா உட்பட வேறு எந்த பவுலரும் செய்யாத புதிய ஐபிஎல் வரலாற்று படைத்த சஹால் – லெஜெண்ட் தான்

எப்போது திரும்புவார்:
இருப்பினும் எந்த நாள் அன்று அவர் மீண்டும் ராஜஸ்தான் அணியுடன் இணைவார் என்ற செய்தி குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக ராஜஸ்தான் தனது 12-ஆவது போட்டியில் வரும் மே 11-ஆம் தேதியன்று டெல்லியை எதிர்கொள்கிறது. அதற்கு முன் சிம்ரோன் ஹெட்மயர் அணியில் இணைந்தாலும் கூட தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் அந்த போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் மே 15-ம் தேதி லக்னோவுக்கு எதிராக நடைபெறும் அதற்கு அடுத்த போட்டியில் அவர் உறுதியாக களமிறங்குவார் என நம்பலாம்.

Advertisement