IND vs RSA : நாங்க ஜெயிக்க அவர் எடுத்த அந்த முடிவு தான் காரணம் – தெ.ஆ கேப்டனுக்கு நன்றி சொன்ன தவான்

dhawan 1
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் நேற்று ராஞ்சி நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற நிலையில் சமன் செய்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்தது.

பின்னர் 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 45.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் :

Ishan-Kishan

இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக நினைக்கிறேன். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த கேஷவ் மகாராஜ்-க்கு நன்றி. அவரது முடிவு இறுதியில் எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சேசிங் செய்யும்போது டியூ சரியான நேரத்தில் வந்ததால் பந்து பேட்டுக்கு வந்தது. அதனால் எளிதாக ரன்களை குவிக்க முடிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

அந்த பாட்னர்ஷிப் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. சேசிங்கின் போது பந்து நன்றாக பேட்டிற்கு வந்ததால் சற்று நின்று நிறைய நேரம் விளையாடி அவர்கள் இருவரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். முதல் பத்து ஓவர்களிலேயே நாங்கள் அடித்து விளையாட நினைத்தோம். ஏனெனில் மிடில் ஓவர்களின் போது பேட்டிங் செய்ய சற்று சிரமமாக இருக்கும் என்று நினைத்து அந்த முடிவை எடுத்தோம்.

இதையும் படிங்க : IND vs RSA : நானும் தோனியோட ஊர்தான். சிக்ஸர்களை பறக்கவிட்டு பரவசப்படுத்திய இளம்வீரர் – விவரம் இதோ

ஆனாலும் போட்டியின் இரண்டாம் பாதியில் டியூ வந்ததால் பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது. பந்து வீச்சிலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் இருந்து எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது என ஷிகார் தவான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement