இலங்கை அணிக்கெதிரான படுமோசமான தோல்விக்கு இதுவே காரணம் – கேப்டன் தவான் புலம்பல்

dhawan 1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மழையின் காரணமாக போட்டி குறைக்கப்பட்டதால் 47 ஓவர்களை விளையாட துவங்கியது. துவக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தாலும் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

sl

- Advertisement -

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களையும் முழுவதுமாக முடிக்காமல் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சயா மற்றும் ஜெயவிக்ரமா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை பெற்றது. அந்த அணி சார்பாக அவிஷ்கா பெர்னாண்டோ 76 ரன்களையும், ராஜபக்சே 65 ரன்கள் குவித்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தவான் கூறுகையில் : இன்றைய போட்டி எங்கள் அணியின் வழியில் செல்லவில்லை. நாங்கள் சில புது வீரர்களை இந்த போட்டியில் முயற்சித்தோம். எங்களுக்கு நல்ல தொடக்கம் இருந்தும் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இதன் காரணமாகவே 50 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்து விட்டோம். இருப்பினும் அறிமுகப் போட்டியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்.

sky

இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் எதிர்வரும் டி20 தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டியிலும் எங்கள் அணி சிறப்பான கடைசி நேரத்தில் கடுமையான போராட்டத்தை கொடுத்தது. ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் புது புது விடயங்களை கற்றுக் கொண்டே வருகிறோம் என தோல்வி குறித்து அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement