INDvsNZ : அந்த ஒரே ஒரு ஓவர்தான் எல்லாம் நாசமா போச்சி. தோல்வி குறித்து – ஷிகார் தவான் வருத்தம்

Shikhar-Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று நவம்பர் 25-ஆம் தேதி ஆக்லாந்து நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. பின்னர் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக கேப்டன் ஷிகார் தவான், சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவர் அரைசதம் அடித்தனர்.

IND vs NZ Kane Willamson Shikar Dhawan

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 47.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக வில்லியம்சன் 94 ரன்களும், டாம் லேதம் 145 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற தோல்வி குறித்து பேசிய கேப்டன் தவான் கூறுகையில் :

இந்த மைதானத்தில் 300 ரன்களுக்கு மேல் குவித்தது சிறப்பான ஒன்றுதான். அதேபோன்று பந்து வீச்சிலும் முதல் 15 ஓவர்கள் வரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் அதன் பிறகு மைதானத்தின் தன்மை முற்றிலுமாக மாறிவிட்டது. மேலும் நமது பக்கத்தில் இருந்தும் சிறப்பான பந்துவீச்சு வெளிப்படவில்லை.

- Advertisement -

இந்த போட்டியில் ஷார்ட் பிட்ச் பந்துகளை டாம் லேதம் அடித்து விளையாட ஆரம்பித்து விட்டார். அதிலும் குறிப்பாக ஷர்துல் தாகூர் வீசிய 40-ஆவது ஓவரை அவர் அடித்து நொறுக்கியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் போட்டியின் முமெண்டம் அவர்களது பக்கம் சென்றது.

இதையும் படிங்க : உ.கோ ஜெயிக்கணும்னா ஐபிஎல் விளையாடாதீங்க – ரோஹித் சர்மாவுக்கு கொட்டு வைக்கும் அவரது கோச், பேசியது என்ன

இந்த போட்டி நிச்சயம் சிறப்பான ஒரு போட்டியாக தான் அமைந்தது இருந்தாலும் வெற்றி பெற்றிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருந்திருப்போம். நமது அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலானோர் இளம் வீரர்கள் என்பதனால் இது போன்ற போட்டிகள் அவர்களுக்கு நல்ல பாடமாக அமையும். நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றியுடன் திரும்புவோம் என தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement