- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய ராணுவத்தை அவமானப்படுத்திய அப்ரிடி.. தவான் நெத்தியடி பதில்.. மீண்டும் கலாய்த்ததால் ரசிகர்கள் கோபம்

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்சனை காரணமாக 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகிறது. அதற்கு முன்பாகவே 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. அதன் காரணமாக 2023 ஆசிய, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கை மற்றும் துபாயில் விளையாடி வெற்றியும் கண்டது.

அந்த சூழ்நிலையில் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் 26 அப்பாவி இந்திய மக்கள் இயற்கையை எழுதியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதன் காரணமாக சிந்து நதியில் தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது உட்பட இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

- Advertisement -

கலாய்த்த அப்ரிடி:

ஆனால் அந்த நிகழ்வுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்தார். மேலும் இந்தியாவில் பட்டாசு வெடித்தால் கூட அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று குறை சொல்லும் இந்தியர்கள் பாலிவுட் நாடகத்தை அரங்கேற்றுவதாகவும் அப்ரிடி கூறினார். அத்துடன் 8 லட்சம் பேர் கொண்ட ராணுவம் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்ரிடி தெரிவித்தார்.

அப்படியானால் இந்திய ராணுவம் பயனற்ற வகையில் செயல்படுவதாக கூறிய அப்ரிடி பாகிஸ்தானை குறைச் சொல்லும் இந்தியர்கள் ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்திய ராணுவம் மற்றும் மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய அவருடைய பேச்சுக்கள் இந்தியர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ட்விட்டரில் (எக்ஸ்) அப்ரிடிக்கு கொடுத்த பதிலடி பின்வருமாறு.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:

“நாங்கள் உங்களை கார்கில் போரில் தோற்கடித்தோம். எனவே தேவையற்ற கருத்துக்களை அனுப்புவதற்கு பதிலாக உங்கள் நாட்டை எவ்வாறு முன்னேற்ற முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்” என நெத்தியடி பதிலைக் கொடுத்தார். ஆனால் அதற்கு “வெற்றித் தோல்வியைப் பற்றி மறந்து விடுங்கள். இங்கே வாருங்கள் உங்களுக்கு தேனீரை விருந்தளிக்கிறேன் ஷிகர்” என்று அப்ரிடி கலாய்க்கும் வகையில் பதில் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரே ஆளா நின்னு எங்க டீமை ஜெயிக்க வச்சிட்டாரு.. பல வருஷமா அவர் இதைத்தான் செய்றாரு – அஜின்க்யா ரஹானே புகழாரம்

அதாவது 2019இல் இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டார். அங்கு சிறைப் படிக்கப்பட்ட அவருக்கு பாகிஸ்தான் அரசு தேனீர் கொடுத்தது. அதை வீடியோ எடுத்து பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை காண்பித்த பாகிஸ்தான் பின்னர் அவரை விடுவித்தது. இதே போல நீங்களும் வந்தால் தேநீர் கொடுப்போம் என்று தவானை அப்ரிடி கலாய்த்துள்ளது இந்தியர்களை மீண்டும் கோபமடைய வைக்கிறது.

- Advertisement -