IND vs NZ : 2 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சனை ஏன் சேக்கல தெரியுமா? – காரணத்தை கூறிய கேப்டன் தவான்

Sanju-Samson-and-Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் ஏற்கனவே நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஹாமில்டன் நகரில் துவங்கி நடைபெற்றது.

Seden-Park-Rain

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இந்திய அணி 12.5 ஓவர்களில் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 89 ரன்கள் குவித்திருந்த வேளையில் மழை பெய்ததின் காரணமாக போட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் விளையாடி இருந்தாலும் இப்படி இரண்டாவது போட்டியிலிருந்து திடீரென அவர் நீக்கப்பட்டுள்ளது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sanju Samson

அதோடு தொடர்ச்சியாகவே சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் அவருக்கான ஆதரவு ரசிகர்கள் மத்தியில் குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் வெளியே ஏன் உட்கார வைக்கப்பட்டார் என்று பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் அவற்றிற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக போட்டி முடிந்த பிறகு விளக்கம் அளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தவான் கூறுகையில் : இந்த போட்டி நின்று போனது சற்று ஏமாற்றம் தான் இருந்தாலும் இயற்கையை நாம் கட்டுப்படுத்த முடியாது. போட்டி நடைபெறும் என்று காத்திருக்க முடியுமே தவிர வேறு ஏதும் இதில் நாம் செய்ய முடியாது. இந்த போட்டியில் ஆறாவது பவுலர் வேண்டும் என்பதற்காகவே சஞ்சு சாம்சன் இந்த போட்டியினை தவறவிட்டார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு நீங்க வரலைனா யாருமே அங்க வரமாட்டாங்க – ரமீஸ் ராஜாவுக்கு டேனிஷ் கனேரியா கொடுத்த பதிலடி

அவருக்கு பதிலாக ஆறாவது பவுலிங் ஆப்ஷனாக தீபக் ஹூடா அணிக்குள் கொண்டுவரப்பட்டார். அதேபோன்று தீபக் சாகரும் நன்றாக ஸ்விங் செய்து பந்து வீசுவார் என்பதனால் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அவர் இடம்பெற்றார். அணியில் உள்ள அனைவருக்குமே வாய்ப்பு அளிக்க தான் நாங்கள் விரும்புகிறோம் என்று தவான் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement