உலகத்துல எது மாறுனாலும் இது மாறாது.. பாகிஸ்தான் ஸ்கூல் சொதப்பலை கலாய்த்த ஓப்பனாக தவான்

Pakistan Fielding
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகும் நடைபெற்று வரும் பயிற்சி போட்டிகளில் அக்டோபர் 3ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 10வது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் பாகிஸ்தான் அணியை பாபர் அசாமுக்கு பதிலாக சடாப் கான் கேப்டனாக வழி நடத்தினார். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 351/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 48, மார்னஸ் லபுஸ்ஷேன் 40, கிளன் மேக்ஸ்வெல் 77, கேமரூன் கிரீன் 50*, ஜோஷ் இங்லீஷ் 48 ரன்கள் ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

கலாய்த்த தவான்:
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உஷாமா மிர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் ஹரிஷ் ரவூப் வீசிய 23வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் லெக் சைட் திசையில் லேசாக தட்டி விட்டு டபுள் ரன் எடுக்க ஓடினார். அப்போது அதை இருபுறங்களிலும் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் முகமது நவாஸ் மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தடுப்பதற்காக வேகமாக ஓடி வந்தனர்.

இருப்பினும் கிட்டத்தட்ட இருவருமே மிகச் சரியாக ஓடி இருந்த சூழ்நிலையில் பந்து அவர்களுக்கு நடுவே பவுண்டரியை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்வோம் என்ற பயத்தில் பந்தை அவர் தடுப்பார் என்று இவரும் இவர் தடுப்பார் என்று அவரும் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்தார்களே தவிர கடைசி வரை யாருமே தடுக்கவில்லை.

- Advertisement -

மறுபுறம் அந்த சமயத்திற்குள் மெதுவாக வந்து கொண்டிருந்த பந்து அவர்களை கடந்து பவுண்டரி எல்லையை தொட்டு ஆஸ்திரேலியாவுக்கு 4 எளிதான ரன்களை கொடுத்தது ஹரிஷ் ரவூப் உள்ளிட்ட இதர பாகிஸ்தான் வீரர்களை கடுப்பாக வைத்தது. அதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டு கலாய்த்த நிலையில் “இது மட்டும் பாகிஸ்தான் அணியில் மாறவில்லை” என்று நேரலையில் வர்ணனையாளராக செயல்பட்ட சஞ்சய் மஞ்ரேக்கர் கலகலப்பாக பேசினார்.

அதை விட இதை பார்த்த நட்சத்திர இந்திய வீரர் சிக்கர் தவான் “பாகிஸ்தான் மற்றும் அவர்களுடைய ஃபீல்டிங் எப்போதுமே முடியாத காதல் கதை” என்று ட்விட்டரில் வீடியோவாக பதிவிட்டு ஆனந்தத்துடன் சிரித்து கலாய்த்துள்ளார். ஏனெனில் வரலாற்றில் சயீத் அஜ்மல் – சோயப் அக்தர் கைக்கு கிடைத்த கேட்ச்சை விட்டது உட்பட வரலாற்றில் பல தருணங்களில் பாகிஸ்தான் வீரர்கள் சுமாரான ஃபீல்டிங் செய்துள்ளனர். அதனாலேயே அனைவரும் இப்படி அந்த அணி வீரர்களை கலாய்ப்பது வழக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement