PBKS vs KKR : நாங்க தோத்து இருந்தாலும். கடைசி ஓவரை அவரு அற்புதமா போட்டாருங்க – ஷிகர் தவான் பேட்டி

Dhawan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கடைசி பந்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

KKR vs PBKS

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவு ஏழு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஷாருக் கான் ஆகியோர் 21 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக நிதீஷ் ராணா 51 ரன்களையும், ரசல் 42 ரன்களையும், ரிங்கு சிங் 21 ரன்களையும் குவித்தனர்.

Arshdeep Singh

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் தோல்வி அடைந்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதோடு இந்த போட்டியை நாங்கள் இழந்ததை நினைத்தால் கஷ்டமாகவும் இருக்கிறது.

- Advertisement -

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது. எனவே நாங்கள் அடித்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தோம். ஆனால் இறுதியில் கொல்கத்தா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது. இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாகவே வீசினார்.

இதையும் படிங்க : KKR vs PBKS : அவர்கிட்ட இருந்து இப்படி ஒரு இன்னிங்ஸ் வரும்ன்னு எனக்கு தெரியும் – வெற்றிக்கு பிறகு நிதீஷ்ராணா பேட்டி

கடைசி போட்டியில் இருந்து அவர் மீண்டு வந்து இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அடைய வைக்கிறது. அதோடு இந்த போட்டியில் கடைசி பந்து வரை ஆட்டத்தை கொண்டு சென்ற பெருமை அவரைத் தான் சேரும். அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் மிக அற்புதமாக பந்துவீசியிருந்தார் என ஷிகர் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement