- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தப்போகும் 2 இந்திய வீரர்கள் இவர்கள் தான் – ஷிகர் தவான் கருத்து

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான பலப்பரீட்சையில் போட்டியிட காத்திருக்கின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தப்போகும் 2 வீரர்கள் :

நாளை துவங்கும் இந்த தொடரானது மார்ச் 9-ஆம் தேதி முடிவடையவுள்ள வேளையில் இந்த தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த கருத்துக்களையும் பல்வேறு முன்னாள் வீரர்கள் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியில் முன்னாள் வீரரான ஷிகர் தவான் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்லும் என்றும் அதில் இரண்டு முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் தனது கணிப்பினை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொருத்தவரை 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

2013-ஆம் ஆண்டு நான் முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இருந்தேன். அப்போது இருந்து இப்போது வரை அந்த தொடரை நினைத்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொறுத்தவரை யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாது. இருந்தாலும் இந்தியாவை தாண்டி என்னால் வெற்றியாளரை யோசிக்க முடியாது.

- Advertisement -

இந்திய அணியின் மீது எனக்கு மிக நம்பிக்கை உள்ளது. தற்போதுள்ள இந்திய வீரர்கள் மிகச்சிறப்பான திறமைசாலிகள். இந்திய அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலவையில் உள்ளனர். பும்ரா இந்த தொடரில் இருந்து வெளியேறியது நமக்கு இழப்பாக இருந்தாலும் ஹர்ஷித் ராணா அவரது இடத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் அவர் ரன்களுக்கு சென்றாலும் அவர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பந்துவீசி வருகிறார்.

இதையும் படிங்க : விக்கெட் கீப்பராக இல்லனாலும் இப்படி ஒரு வாய்ப்பு ரிசப் பண்ட்க்கு தாங்க.. கண்டிப்பா அசத்துவாரு – கோச் கருத்து

அதேபோன்று சுப்மன் கில்லும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார். அவராலும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தொடரில் ஏற்படுத்த முடியும். என்னை பொறுத்தவரை இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்ஷித் ராணா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -