- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் இல்லன்னு சொல்லல.. ஆனா தோனி பாய் தான் எனக்கு அந்த சப்போர்ட் பண்ணாரு.. தவான் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் மிஸ்டர் ஐசிசி என்ற ரசிகர்களால் போற்றப்படுகிறார். 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடும் மிகவும் தடுமாற்றமாக பேட்டிங் செய்தார். இருப்பினும் அவருடைய திறமையை அறிந்த அப்போதையை கேப்டன் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அவரை ரோஹித் சர்மாவுடன் புதிய ஓப்பனிங் ஜோடியாக அறிமுகப்படுத்தினார்.

அந்த வாய்ப்பில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவியதுடன் தங்க பேட் விருதை வென்றார். 2015 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த தவான் 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க பேட் விருதை வென்றார். 2018 ஆசிய கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

தோனியின் ஆதரவு:

2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதத்தை அடித்த தவான் இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறினார். அந்த காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த அவரால் முன்பு போல் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடியவில்லை. மறுபுறம் அவருக்கு போட்டியாக ராகுல், கில், இஷான் கிசான் ஆகியோர் ஓப்பனிங் இடத்தைப் பிடிக்க வந்தனர்.

அதனால் கடந்த வருடம் ஓய்வு பெற்ற தவான் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தம்முடைய கேரியரின் ஆரம்பக் காலங்களில் தடுமாற்றமாக விளையாடியதால் தம் மீதே தமக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததாக தவான் தெரிவித்துள்ளார். அப்போது தோனி தம் மேலே நம்பிக்கை வைத்து கொடுத்த ஆதரவு நாளடைவில் சிறப்பாக விளையாட உதவுவதற்காகவும் தவான் கூறியுள்ளார்.

- Advertisement -

தவான் நெகிழ்ச்சி:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் தோனி பாய் எனக்கு நிறைய ஆதரவைக் கொடுத்து எனக்கு பின்புலமாக இருந்ததாக கருதினேன். என்னுடைய கேரியரின் துவக்கத்தில் என் மேலே அவர் வைத்திருந்த தன்னம்பிக்கைப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அப்படி உங்கள் மீது ஒரு கேப்டன் நம்பிக்கையைக் காண்பித்தால் அது நீங்கள் வளர்ந்து நீண்ட வழியில் செல்வதற்கு உதவும்”

இதையும் படிங்க: ராகுல் டிராவிட் மற்றும் ஜேக் காலிஸை கடந்து உலகளவில் 3 ஆம் இடத்தை பிடித்த ஜோ ரூட் – இமாலய சாதனை

“அதன் பின்பும் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் கேப்டனாக வந்த போது எனக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் என்னுடைய கேரியரின் ஆரம்பக் காலங்களில் தோனி பாய் கொடுத்த ஆதரவு ஸ்பெஷலானது. அதற்கு நிகராக போல பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவின் ஆதரவும் முக்கியமானது. களத்திற்கு வெளியே அவர்களுடைய உத்வேகம் உங்களுக்கு நன்றாக செயல்பட உதவும்” என்று கூறினார்.

- Advertisement -