இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான ஜோ ரூட் கடந்த 2012-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 156 போட்டிகளில் விளையாடி 37 சதம் மற்றும் 66 அரைசதம் என 13,259 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். தற்போது 34 வயதான ஜோ ரூட் இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவார் என்பதால் சச்சினின் சாதனையும் அவரால் முறியடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோ ரூட் :
தற்போது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியின் போது சதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பியிருந்தார்.
அதன் காரணமாக எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் அற்புதமான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாளான நேற்று இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்திருந்தது. அதன்காரணமாக 133 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது மிகச் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட், ஆலி போப் இருவருமே தற்போது அரைசதம் கடந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் ஜோ ரூட் 31 ரன்களை அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதனையில் : இந்திய அணிக்கு எதிரான இந்த நான்காவது போட்டியில் அவர் 31 ரன்கள் அடித்தபோது :
இதையும் படிங்க : ஒரு வீரர் கூட பேக்கப் இல்ல.. இந்திய டெஸ்ட் அணியின் டீம் செலக்ஷனை விமர்சித்த – ஆகாஷ் சோப்ரா
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களாக மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருந்த ஜாக் காலிஸ் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி தற்போது ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்து மூன்றாவது இடத்தை ஜோ ரூட் பிடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (15921) முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் (13378) இரண்டாவது இடத்திலும் உள்ள வேளையில் தற்போது ஜோ ரூட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



