சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
இந்திய அணியின் டீம் செலக்ஷனை விமர்சித்த : ஆகாஷ் சோப்ரா
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஒருவேளை தோல்வியை சந்தித்தால் இந்த தொடரை இங்கிலாந்து அணியிடம் இழக்க நேரிடும் என்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்த அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க முதலில் விளையாடிய இந்திய அணியானது 358 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் அணித்தேர்வு சரியானது கிடையாது என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது அனுபவங்களை கற்றுக் கொள்ளும் என்பது உண்மைதான். ஆனாலும் இதுபோன்ற பெரிய தொடரில் இன்னும் சரியான வீரர்களை தேர்வு செய்திருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்தில் கருண் நாயர் ஆறாவது வீரராக களமிறங்கி விளையாடினார், பின்னர் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். பின்னர் மூன்றாவது இடத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் சாய் சுதர்சன் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரை பொறுத்தவரை இந்திய அணியில் மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் பெரியளவில் வீரர்களை சேர்க்கவில்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க : முகமது சிராஜ்க்கு பதிலா அன்ஷுல் கம்போஜ் ஓப்பனிங் ஸ்பெல் வீச இதுதான் காரணம் – அஷ்வின் விளக்கம்
நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஆல்ரவுண்டர்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் ரிஷப் பண்டிற்கு பின்னர் ஆறாவது இடத்தில் பிராப்பராக பேட்டிங் செய்யும் ஒரு பேட்ஸ்மேன் இல்லாததும் இந்திய அணியின் இந்து சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் என அணித்தேர்வை ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



