இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று முன்தினம் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு சுருண்டது.
அன்ஷுல் கம்போஜ் துவக்க ஓவர்களை வீசியது ஏன்? : ரவிச்சந்திரன் அஷ்வின்
அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 133 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி முதல் இன்னிங்சில் பந்து வீசுகையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுடன் இணைந்து முகமது சிராஜ் துவக்க ஓவர்களை வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் எப்போதுமே இந்திய அணியில் அனுபவ வீரர்கள் இருவரே துவக்க ஓவர்களை வீசுவது வழக்கம்.
ஆனால் விக்கெட் விழும் புதுப்பந்தில் முகமது சிராஜை தவிர்த்து அறிமுக வீரரான அன்ஷுல் கம்போஜ்க்கு பந்துவீச கேப்டன் சுப்மன் கில் வாய்ப்பளித்தது பலரது மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பந்து புதிதாக இருக்கும் போது அனுபவ வீரர்கள் பந்து வீசினால் நிச்சயம் விக்கெட் எடுக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் புதுப்பந்தில் பும்ராவுடன் இணைந்து அன்ஷுல் கம்போஜ் பந்துவீசியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ள முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : அன்ஷுல் கம்போஜ் முதல் தர கிரிக்கெட்டை பொருத்தவரை புதுப்பந்தில் இரண்டு புறமும் ஸ்விங் செய்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரால் பழைய பந்தில் அதிகளவு தனது திறனை வெளிப்படுத்த முடியாது.
இதையும் படிங்க : கால் உடைஞ்ச பிறகும் ரிஷப் பண்ட் என்கிட்ட இதைத்தான் சொன்னாரு.. ரவி சாஸ்திரி பகிர்ந்த – சுவாரசிய தகவல்
ஆனால் முகமது சிராஜ்ஜை பொறுத்தவரை பழைய பந்தில் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர். இதனை கணித்துதான் புதுப்பந்தில் அன்ஷுல் கம்போஜ்ஜை வீசவைத்து மிடில் ஓவர்களில் முகமது சிராஜை சுப்மன் கில் பயன்படுத்தியிருக்கிறார். இதில் எந்த தவறும் கிடையாது என இந்த விவகாரத்துக்கு அஷ்வின் முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.



