ப்ளே ஆஃப் ஏன் போகல ! வீடு திரும்பியதும் நட்சத்திர வீரருக்கு அடி, உதை கொடுத்த ஸ்ட்ரிக்டான தந்தை

Shikar Dhawan Father
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று களமிறங்கிய 10 அணிகளில் புதிய கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் பங்கேற்ற 14 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6-வது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. அதனால் சமீபத்திய வருடங்களைப் போலவே மீண்டும் லீக் சுற்றுடன் வெளியேறிய அந்த அணியின் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு மீண்டும் கனவாகவே போனது. ஒரு போட்டியில் 200 ரன்களைக் கூட அசால்டாக சேசிங் செய்த அந்த அணி மற்றொரு போட்டியில் 150 ரன்களைக் கூட தொட முடியாமல் தோல்வியடையும் அளவுக்கு தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட தவறியதே தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அந்த அணிக்கு இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் லியம் லிவிங்ஸ்டன் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் ஆல்-ரவுண்டராக அட்டகாசமாக செயல்பட்டார். இருப்பினும் மயங்க் அகர்வால், ஜானி பேர்ஸ்டோ போன்ற இதர வீரர்கள் பேட்டிங்கில் தொடர்ச்சியாக பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதேபோல் பந்துவீச்சில் அர்ஷிதீப் சிங், ரபாடா ஆகியோரைத் தவிர இதர பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுக்களை எடுக்க தவறினர்.

- Advertisement -

கப்பார் தவான்:
மேலும் அனுபவ இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் கடந்த வருடங்களில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த நிலையில் இந்த முறை 8.25 கோடி என்ற பெரிய தொகைக்கு பஞ்சாப் அணிக்காக விளையாடினார். வழக்கமாக தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 14 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 460 ரன்களை 38.33 என்ற சராசரியில் 122.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து சிறப்பாக செயல்பட்டாலும் அதிரடியாகவும் தொடர்ச்சியாகவும் ரன்களை குவிக்க தவறியது பஞ்சாப் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

அதே காரணத்துக்காக இந்த ஐபிஎல் முடிந்ததும் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் அவரின் இந்திய கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சுமார் 2 மாதங்கள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருந்து ஐபிஎல் தொடரை முடித்து வீட்டுக்குத் திரும்பிய அவரை அவரது குடும்பத்தினர் வரவேற்காமல் அடி உதை கொடுத்துள்ளனர்.

- Advertisement -

பிளே ஆஃப் ஏன் போகல:
அதாவது பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய தவறியதால் கோபமடைந்த அவரது தந்தை வீட்டுக்கு திரும்பியபோது கன்னத்தில் அறைந்து அடித்து காலால் எட்டி உதைத்து புரட்டி எடுக்கும் வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை அவரது இதர குடும்பத்தினர் தடுக்கும் வகையில் உள்ளது. ஆனால் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வழக்கமாக ஜாலியான வீடியோக்களை வெளியிடும் ஷிகர் தவான் பாலிவுட் படத்தின் ஒரு பின்னணி இசையை கோர்த்து தந்தையிடம் அடி வாங்குவது போல வீடியோ எடுத்து விளையாட்டாகவே இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

எனவே சிரிப்பதற்காக இப்படி ஒரு வீடியோவை எடுத்த அவர் அதற்கு தலைப்பாக “நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாததால் தந்தை நாக் அவுட் செய்கிறார்” என போட்டு கலகலப்புடன் பதிவிட்டுள்ளார். இந்தியா வீடியோவை பார்த்த பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் உங்களது தந்தை இவ்வளவு கோபக்காரரா என்பது போல் அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கதை முடிந்ததா:
ஐபிஎல் முடிந்ததும் நடைபெறும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷிகர் தவான் தலைமையில் இளம் அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 36 வயதை கடந்து விட்ட காரணத்தாலும் அதிரடியாக விளையாட தடுமாறுகிறார் என்ற காரணத்தாலும் அவரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை. மேலும் தொடக்க வீரர்களாக இஷான் கிசான், ருதுராஜ் கைக்வாட் போன்ற நிறைய இளம் வீரர்கள் வரிசையில் நிற்பதால் வரும் காலங்களில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று தெரியவருகிறது.

Advertisement