சி.எஸ்.கே அணிக்கு எதிராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஷிகர் தவான் – விவரம் இதோ

- Advertisement -

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த சென்னைக்கும் டெல்லிக்கும் இடையிலேயான மேட்சில் ருத்ரதாண்டவம் ஆடிய ஷிகர் தவான் ஆட்ட நாயகன் விருது பெற்றுதோடு சென்னைக்கு எதிரான ஒரு சாதனையையும் படைத்தார். தவான் ஃபார்மில் இல்லையா அப்போ சென்னைக்கூட மேட்ச் போடுங்க பார்முக்கு வந்திடுவார் என்ற ரேஞ்சில்தான் கடந்த சில சீசன்களாகவே சென்னை பௌலர்கள் தவனாக்கு பந்து வீசிக் கொண்டிருக்கின்றனர்.

raina

- Advertisement -

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் ஃபீல்டிங்கை தேர்த்தெடுத்தார். சென்னை அணியின் ஓப்பனர்கள் சொதப்பல் ஆட்டம் ஆட, வந்துட்டேனு சொல்லு எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேனு சொல்லு என்ற டயலாக்குக்கு ஏற்றபடி உள்ளே வந்த ரெய்னா டெல்லி பௌலர்களின் பந்துகளை சிதறடிக்க, மறுபுறம் வலிமை அப்டேட் எல்லாம் எனக்கு தெரியாது என்னுடைய பேட்டிங்கல தான் நான் அப்கிரேட் ஆகியிருக்கேன் என்ற ரீதியில் மொயின் அலியும் பேட்டை சுழற்ற இன்னைக்கு 200 ரன்களை சென்னை அடிக்கும் என்று குஷியானார்கள் சென்னை ரசிகர்கள்.

இரண்டு சிக்ஸ் அடிச்சது போதும் கிளம்புனு மொயின் அலியை அஷ்வின் வெளியேற்ற அடுத்து ரெய்னாவும் துரிதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக பின் வந்த ராயுடுவும் அட்டாங்கிங் ஸ்டைலயே தேர்ந்தெடுத்தார். அவருக்குப் பின் வந்த சாம் கரன், அண்ணன் தம்பி பாசமெல்லாம் வீட்டோட வச்சிக்கனும் பிட்சசுக்குள்ள வந்தா அதையெல்லாம் எதிர் பார்க்கக்கூடாதுனு டாம் கரனின் ஓவரை வெளுத்து கட்டினார். இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 188 ரன்களை எடுத்தது.

tom

189 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லி அணியின் ஓப்பனர்களான ப்ரித்வி ஷாவும் , ஷிகர் தவானும் சென்னை அணியின் மொத்த பௌலிங் யூனிட்டையும் ஒரு கை பார்த்தனர். ப்ரித்வி ஷா 72 ரன்களும் ஷிகர் தவான் 85 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தபோது கிட்டதட்ட சென்னை அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது. இறுதியில் 18.4 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் 77 ரன்கள் எடுத்தபோது சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்க்கு முன்னர் 901 ரன்னுடன் முன்னிலையில் இருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் தவான். சென்னைக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஷிகர் தவான் 910 ரன்கள், விராட் கோலி 901 ரன்கள், ரோகித் ஷர்மா 749 ரன்கள், டேவிட் வார்னர் 617 ரன்கள் என முன்னிலையில் உள்ளனர்.

Advertisement