தன் மகன் படிக்கும் பள்ளிக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த அதிரடி வீரர் – வீடியோ உள்ளே

dhawan
- Advertisement -

இந்திய அணியின் முன்னனி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான் தொடர் போட்டிகளின் காரணமாக நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தன்னுடைய மனைவி மற்றும் மகனை காண திடீரென்று யாருக்கும் சொல்லாமல் சர்ப்ரைஸாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

sikharஇந்திய அணிக்காக இரண்டு மாதங்களுக்கும் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை சுற்றுப்பயணம் என ஓய்வின்றி தொடர்ந்து சிலமாதங்களாக விளையாடி வந்தார். தொடர் போட்டிகளின் காரணமாக தனது குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை ஷிகர் தவனால் செலவிட முடியவில்லை.

- Advertisement -

ஷிகர் தவானின் மனைவி மற்றும் மகன் இருவரும் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகின்றனர். தவானின் மகன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்துவருகின்றார்.இந்நிலையில் ஐபிஎல் தொடங்க பத்து நாட்களுக்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் மகனை சந்தித்து அவர்களோடு நேரம் செலவிட திடீரென்று ஆஸ்திரேலியாவிற்கு சென்றார்.ஆஸ்திரேலியாவிற்கு சென்ற தவான் நேராக அவரது மகன் ஜோரேவர் படிக்கும் பள்ளிக்கு சென்று மகனுக்கு தெரியாமல் அவனது கண்களை மூடி நான் யார் என்று சொல் என்று கேட்டு மகனுக்கு இன்பஅதிர்ச்சி தந்துள்ளார்.

தன் தந்தையின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத ஜோரேவர் தவானை கட்டியணைத்து முத்தமழை பொழிந்துள்ளான். இவை அனைத்தும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு சமூகவலைத்தங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

டிவிட்டரில் தவான் “அடுத்த ஒரு வாரம் நான் ஆஸ்திரேலியாவில் என் குடும்பத்தாருடன் நேரம் செலவிடவுள்ளேன். நீண்ட 15மணி நேர பயணத்திற்கு பின் நான் ஆஸ்திரேலியா வந்தடைந்தேன். நான் தந்த சர்ப்ரைஸை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். எவ்வளவு பணம் குடுத்தாலும் கிடைக்காத வரம் இது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement