ரஞ்சி கோப்பை எல்லாம் எதுக்கு. உங்க இஷ்டத்துக்கு எதுவேனாலும் பண்ணுங்க – தேர்வுக்குழுவை விளாசிய இளம் வீரர்

Sheldon
- Advertisement -

இந்திய தேசிய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற முக்கிய காரணமாக கருதப்படுவது ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை மற்றும் விஜய் ஹசாரே போன்ற கோப்பைகள் தான். இந்த உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு கிடைக்கும் இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் சர்வதேச அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Sheldon 1

- Advertisement -

இதுவே இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் வழிமுறையாக உள்ளது. இந்நிலையில் தேர்வு குழு தவறான முடிவுகளை எடுக்கிறது என்று சவுராஷ்டிரா அணியை சேர்ந்த இளம் வீரரான செல்டன் ஜாக்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்வு குழுவினை விளாசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

இந்த வருடம் சௌராஷ்ட்ரா ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது. நாங்கள் அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினோம். இருப்பினும் எங்களில் ஒருவர் கூட இந்திய ஏ அணிக்கு தேர்வாகவில்லை. எனவே ரஞ்சி கோப்பை விளையாடியதில் எங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது. மேலும் ரஞ்சிக் கோப்பையை பொறுத்து பார்த்தால் எங்களுடைய மதிப்பு ஜீரோ தான்.

இதற்கு எதற்கு ரஞ்சி கோப்பை எல்லாம் வைக்க வேண்டும். நேரடியாக தேர்வுக்குழு விருப்பப்படும் நபர்களை தேர்வு செய்யலாம் என்பது போல தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிந்துள்ளார். மேலும் சிறிய நகரங்களில் இருந்து வரும் வீரர்கள் மீது தேர்வு குழுவினரின் பார்வை படவில்லை என்றும் சவுராஷ்டிரா அணியில் இருந்து ஒரு வீரர் கூட இந்திய ஏ அணிக்கு தேர்வாகவில்லை எனவும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement