ராகுல் மற்றும் அனுஷ்கா உறவு குறித்து தவறாக பேசியவரை – விட்டு விளாசிய இந்திய வீரர்

Anushka

இந்திய அணியின் தேர்வாளர்கள் குறித்து சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாகப் பேசியவர் தான் சௌராஷ்ட்ரா அணியை சேர்ந்த செல்டன் ஜாக்சன். ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய ஏ அணியில் கூட இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை நேரடியாக அவர் வெளிக்காட்டினார்.

Sheldon

இந்நிலையில் அவருடைய அந்த ஆதங்கம் பதிவிற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் ராகுலை போன்று அனுஷ்கா சர்மா உடன் நட்பு வைத்துக் கொண்டால் கோலி ஆதரவுடன் உங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுல் மற்றும் அனுஷ்கா குறித்து தவறாக கூறினார்.

அதன்பின்னர் உடனே அந்த வீட்டிற்கு பதிலளித்த செல்டன் ஜாக்சன் பதிலளித்ததாவது : பேசுவதற்கு முன்னர் சற்று யோசித்துப் பேசுங்கள். ராகுல் மற்றும் அனுஷ்கா ஆகியோர் எதுவும் செய்யவில்லை அவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். நல்ல நட்பில் உள்ளவர்கள் அதுமட்டுமின்றி கிரிக்கெட் வேறு, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை வேறு எதையும் இணைத்துப் பேச வேண்டாம் என்று அவருக்கு நேரடியாக பதில் அளித்தார்.

மேலும் ராகுல் தனது திறமை மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றதாகுவும், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருப்பேன் வாய்ப்புகள் வரும்போது வரட்டும் என்று செல்டன் ஜாக்சன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -