மீண்டும் வாய்ப்பளிக்க மறுத்த தேர்வுக்குழு. இலங்கை தொடருக்கான அணியிலும் ஏமாற்றம் – மனமுடைந்த சீனியர் வீரர்

- Advertisement -

ரஞ்சி ட்ராபி தொடர்களில் திறமையாக விளையாடும் பல வீரர்களை, அவர்களின் வயதை காரணம் காட்டி இந்திய அணிக்கு தேர்வு செய்யாமல் விட்டுவிடுகிறது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு. ரஞ்சி ட்ராபி தொடர்களில் புதுச்சேரி அணிக்காக விளையாடி வரும் வீரரான ஷெல்டன் ஜாக்சன். பரோடா, சௌராஷ்டிரா ஆகிய அணிகளுக்காக இதற்கு முன் விளையாடிய ஜாக்சன், இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக கடந்த ஆண்டு புதுச்சேரி அணிக்காக விளையாடும் முடிவை எடுத்தார். 2018-2019 தொடரில் சௌராஸ்டிரா அணியில் விளையாடிய அவர், அந்த தொடரில் 800 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தி அந்த அணி இறுதிப் போட்டிவரை முன்னேறிச் செல்ல உதவினார்.

Sheldon 1

- Advertisement -

அதே சிறப்பான ஆட்டத்தை கடந்த தொடரிலும் வெளிக்காட்டி 800 ரன்களுக்கும் மேல் அவர் அடித்திருந்தார். கடந்த இரு சீசன்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள 34 வயதான ஷெல்டன் ஜாக்சனை அவருடைய வயதை காரணம் காட்டி இந்தியா A அணிக்கு கூட தேர்வு செய்யாமல் விட்டிருக்கிறது இந்திய தேர்வுக் குழு. இதற்கிடையில் ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், அந்த பேட்டியில் இந்திய தேர்வுக் குழுவைப் பற்றியும் அங்கு கையாளப்படும் எழுதப்படாத விதிமுறையைப் பற்றியும் சராமாரியான விமர்ச்சனத்தை முன்வைத்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர்,

எனக்கு 34 வயதாகிறது. இருந்தாலும் 23-24 வயதுடைய வீரர்களைவிட நான் நன்றாகவே விளையாடி இருக்கிறேன். இப்படி இருக்கையில் எந்த விதிமுறை என்னை இந்திய அணியில் தேர்வு செய்யக்கூடாது என்று தடுக்கிறது? வயதாகிவிட்டால் அவரை இந்திய அணியில் சேர்க்ககூடாது என்ற ஒரு விதிமுறை உண்மையில் இருக்கிறதா? யார் இதை முடிவு செய்கிறார்கள்? வாயதாகி விட்டால் உடல் தகுதி இல்லாமல் போய்விடுமா. தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று சீசன்களாக 800-900 ரன்கள் அடிக்கும்போதே அந்த வீரர் தகுந்த உடல் தகுதியுடன் இருக்கிறாரென்று தான் அர்த்தம் என்று கூறியிருந்தார்.

Sheldon

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை தொடரிலாவது இவருக்கு ஒரு ஆறுதல் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த செல்டன் ஜாக்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த இலங்கை தொடரிலும் தன்னை தேர்வு செய்யாததால் விரக்தியடைந்த செல்டன் ஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதயம் நொருங்கியது போன்ற ஒரு ஸ்மைலி பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Sheldon

இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதோ :தவான், புவனேஷ்வர் குமார், பிரித்வி ஷா,தேவ்தத் படிக்கல்,சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நித்தீஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்ப கெளதம், வருண் சக்கரவர்த்தி, சைனி, க்ருனால் பாண்டியா, ராகுல் சாகர், தீபக் சாகர், சேத்தன் சக்காரியா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல்

Advertisement