வேண்டுகோள் வைத்த கங்குலி. மறுக்காமல் ஏற்றுக்கொண்ட வங்கதேச பிரதமர் – விவரம் இதோ

- Advertisement -

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அடுத்தமாதம் நவம்பர் 22ம் தேதி நடைபெற உள்ளது.

Ind

- Advertisement -

இந்நிலையில் அந்தப்போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்று கங்குலி ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான ஒப்புதல் கடிதம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கும் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த போட்டியை காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண வருமாறு கங்குலி எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்புவிடுத்தார். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் கங்குலி இந்த கோரிக்கையை வைத்ததால் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் நான் அதனை ஏற்றுக் கொண்டேன் எனவே கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் பகல் இரவு போட்டியை நான் நேரில் சென்று பார்க்க உள்ளேன். இதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Ind-1

மேலும் இந்த கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மட்டுமின்றி இந்திய பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் கங்குலி தரப்பில் இருந்து ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனவே கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி பிரசித்தமான ஒரு போட்டியாக மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement