சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவிக்கு அவரு செட்டாக மாட்டாரு – வெளிப்படையாக பேசிய ஷான் பொல்லாக்

Pollock
Advertisement

நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான பிளே ஆப் சுற்றின் வாய்ப்பினை ஏற்கனவே இழந்து விட்டது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே சென்னை அணிக்கு எஞ்சி இருப்பதால் அடுத்த ஆண்டிற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே கேப்டன் தோனி தனது பதவியில் இருந்து வெளியேறி ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்.

CSK MS Dhoni Ravindra Jadeja

ஆனால் ஜடேஜாவின் தலைமையில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியால் முதல் 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது. இதன் காரணமாக தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே ஜடேஜா வழங்கினார். கேப்டன்சியில் இருந்த அழுத்தம் காரணமாக ஜடேஜா வெளியேறியதால் அவருக்கு பதிலாக மீண்டும் தோனியே தற்போது கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் 40 வயதான தோனி இன்னும் எத்தனை நாட்கள் விளையாடுவார் என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது. எனவே சென்னை அணி அடுத்த கேப்டனை தயார் செய்ய வேண்டியது அவசியமாகி உள்ளது. இந்த ஆண்டு தோனி சிறப்பாக ஆடினாலும் அடுத்த ஆண்டு அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா? மாட்டாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரியும். எனவே அடுத்த கேப்டன் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

Ruturaj

இந்நிலையில் ஜடேஜா அடுத்த ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்தால் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தான் அணியை வழிநடத்த வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் கெய்க்வாட்டை கேப்டனாக மாற்றக் கூடாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் இளமையான வீரர். அதுமட்டுமின்றி குறைந்த அளவிலான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவரால் ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் தொடர்ச்சியாக ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியாது. இன்னும் கேப்டனாகும் அளவிற்கு அவர் பக்குவம் அடையவில்லை. ஒருவேளை தோனி அடுத்த ஆண்டு ஓய்வு அறிவித்து விட்டால் சென்னை அணியின் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2022 : வெளியேறும் ஹைதராபாத் நட்சத்திரம் – வருந்துவதற்கு பதிலாக ரசிகர்கள் மகிழ்ச்சி, காரணம் இதோ

தற்போதைய சூழலில் ருதுராஜ்க்கு அணியின் கேப்டனாக செயல்படக்கூடிய கெப்பாசிட்டி இல்லை என்றே நான் கூறுவேன். அதேபோன்று சென்னை அணியை வழிநடத்த ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் இருந்தால் அவரை நியமிக்கலாம் அது தான் சரியாக இருக்கும். தோனியிடம் இருந்து இன்னும் நிறைய பாடங்களை ருதுராஜ் கற்றுக்கொள்ள வேண்டும் என பொல்லாக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement