INDvsRSA : நான் உங்கள எப்படி நெனச்சேன். கடைசில இப்படி பண்ணிடீங்களே – ஷான் பொல்லாக் ஆதங்கம்

Pollock
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜொகனஸ்பர்க் நகரில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களை மட்டுமே குவித்து இன்னிங்க்ஸை முடித்துக்கொண்டது. அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 50 ரன்களும், அஷ்வின் 46 ரன்கள் குவித்தனர். அவர்கள் இருவரை தவிர எந்த ஒரு வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

Ngidi-1

- Advertisement -

இந்திய அணியானது இப்படி முதல் நாள் முடிவதற்குள் சொற்ப ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகுமென்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் line-up குறித்து பேசியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் கூறுகையில் : இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஏற்பட்டுள்ள சொதப்பல் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் இந்திய அணி விளையாடிய விதத்தை பார்க்கையில் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தேன்.

Rahane

ஆனால் இம்முறை இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் செய்த தவறு ஒன்றுதான். இந்த போட்டியில் விழுந்த 10 விக்கெட்டுகளும் கேட்ச்சின் மூலமாகவே வந்துள்ளன. அனைவரும் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்துகளை அடிக்க நினைத்து ஆட்டம் இழந்து வெளியேறி உள்ளனர். இந்திய அணியின் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள இந்த சொதப்பல் எனக்கு வருத்தத்தை தந்துள்ளது என பொல்லாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : அம்பயர் செய்த தவறால் ஆட்டமிழந்தாரா ஹனுமா விஹாரி – 3 ஆவது அம்பயரையும் திட்டும் ரசிகர்கள்

நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 35 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளில் தங்களது முதல் இன்னிங்க்ஸை தெ.ஆ அணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement