வீடியோ : அம்பயர் செய்த தவறால் ஆட்டமிழந்தாரா ஹனுமா விஹாரி – 3 ஆவது அம்பயரையும் திட்டும் ரசிகர்கள்

Vihari
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதுகு வலி காரணமாக விளையாட முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்புக்கு காத்திருந்த ஹனுமா விஹாரிக்கு ஒருவழியாக இடம் கிடைத்தது.

- Advertisement -

இந்த போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 53 பந்துகளை சந்தித்த விஹாரி 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் குவித்த நிலையில் தற்போது விஹாரி ஆட்டமிழந்தது ஒரு நோபால் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் அம்பயர் மட்டுமில்லாது 3 ஆவது அம்பயரும் இந்த விடயத்தில் கவனக்குறைவாக இருந்துள்ளதாக அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி ரசிகர்கள் சில கருத்துக்களை சமூக வலை தளத்தில் முன்வைத்து வருகின்றனர். அதன்படி இந்த முதல் இன்னிங்சின் 39-வது ஓவரின் 4-வது பந்தை வீசிய ரபாடா காலை கிரீசுக்கு வெளியே வைத்து வீசினார் என்று ரசிகர்கள் சில புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனாலும் இந்த வீடியோவை உற்றுநோக்கும் பட்சத்தில் காலின் கீழ்பகுதி கிரீஸை சற்று தொட்டுள்ளது போன்று தான் தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த பின் நீங்களும் இந்த விக்கெட் குறித்த உங்களது கருத்துகளை கமென்ட் பகுதியில் பதிவிடலாம் நண்பர்களே.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் நாள் ஆட்டத்தில் காயமடைந்த முகமது சிராஜ். இன்று பந்துவீசுவாரா? – அஷ்வின் அளித்த பதில்

இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல்அவுட் ஆன நிலையில் தென்னாப்பிரிக்க அணியானது நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணியானது 2 ஆவது நாளான இன்று தங்களது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.

Advertisement