முதல் நாள் ஆட்டத்தில் காயமடைந்த முகமது சிராஜ். இன்று பந்துவீசுவாரா? – அஷ்வின் அளித்த பதில்

Siraj-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று ஜொகனஸ்பர்க் நகரில் உள்ள வாண்டர்ரஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 50 ரன்களும், அஷ்வின் 46 ரன்களும் குவித்தனர். தென்னாப்பிரிக்க அணி சார்பாக இளம்வீரர் யான்சென் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

janson

- Advertisement -

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 35 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் கால் தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதன் காரணமாக அவரால் இன்றைய 2-வது போட்டியில் பந்து வீச முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் உடல்நலம் குறித்து பேட்டியளித்துள்ள சக வீரரான அஷ்வின் கூறுகையில் :

siraj 1

சிராஜ்க்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது காயத்தின் தன்மை தொடர்ச்சியாக பிசியோதெரபிஸ்ட் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று அவர் நன்றாகவே இருந்துள்ளார். நிச்சயம் அவரால் இந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் பந்து வீச முடியும். நான் ஏற்கனவே இது குறித்து மருத்துவர்களிடம் பேசி விட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் ஒரே ஒரு இன்னிங்ஸ் தான் அதோட அவங்க 2 பேரோட கரியர் ஓவர் – சுனில் கவாஸ்கர் ஆவேசம்

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவர் பந்து வீச தயாராக இருக்கிறார் என அஷ்வின் கூறியுள்ளதால் சிராஜுக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்று தெரிகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை காரணமாக இன்றைய போட்டியில் சிராஜ் குறைந்த அளவு ஓவர்களையே பந்து வீசுவார் என்று தெரிகிறது.

Advertisement