இன்னும் ஒரே ஒரு இன்னிங்ஸ் தான் அதோட அவங்க 2 பேரோட கரியர் ஓவர் – சுனில் கவாஸ்கர் ஆவேசம்

Gavaskar
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு தற்போது கெட்ட காலம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு கடந்த பல தொடர்களாகவே அவர்கள் இருவரும் படுமோசமாக சொதப்பி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்களது அனுபவத்தை முன்வைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனாலும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை இருவரும் தொடர்ந்து வீணடித்து வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் போதே அவர்கள் இருவரையும் வெளியேற்றிவிட்டு அணியில் இளம் வீரர்களை கொண்டு வரவேண்டும் என்ற பேச்சு அதிகளவில் இருந்தது.

pujara 1

ஆனாலும் அணியின் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் இணைந்து மீண்டும் அவர்களது அனுபவத்தை நம்பி அவர்களுக்கு இந்த தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கியது. நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அவர்கள் இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் விராட் கோலி இல்லாத சமயத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது இவர்கள் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் நடைபெற்று முடிந்த இந்த முதலாவது இன்னிங்சில் புஜாரா 33 பந்துகளை சந்தித்து 3 ரன்களும், ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் இனி இந்திய அணிக்கு தேவையில்லை என்று கொதித்தெழுந்து வருகின்றனர்.

Pujara

இந்நிலையில் இந்த போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தனது ஆவேசத்தை வர்ணனையின் போது நேரலையில் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இவர்கள் இருவரும் ஆடுவதை பார்க்கும்போது அடுத்து ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே இவர்களுக்கு தங்களது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாக்கி இருப்பதாக தோன்றுகிறது. அவ்வளவு மோசமாக இவர்களது பார்ம் உள்ளதாக கவாஸ்கர் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயரை 2 ஆவது போட்டியில் சேர்க்காததன் காரணத்தை சொன்ன பி.சி.சி.ஐ – கலாய்க்கும் ரசிகர்கள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சிற்கு பிறகு அவர்களது டெஸ்ட் கரியர் முடிவுக்கு வரும் என்று கவஸ்கர் பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் அடுத்தடுத்து இவர்கள் ஃபெயிலியர் ஆகி வருவது சரியல்ல என்றும் கவாஸ்கர் வெளிப்படையாக நேரலையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement