ஷ்ரேயாஸ் ஐயரை 2 ஆவது போட்டியில் சேர்க்காததன் காரணத்தை சொன்ன பி.சி.சி.ஐ – கலாய்க்கும் ரசிகர்கள்

Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக இடம்பெறவில்லை. இதன் காரணமாக விராட் கோலிக்கு பதிலாக இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக போட்டியிலேயே சதம் மற்றும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அதோடு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 202 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

Iyer

- Advertisement -

இதனால் நிச்சயம் விராட் கோலிக்கு பதிலாக அவரே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக நீண்ட நாட்களாக தனது டெஸ்ட் இடத்திற்காக காத்திருந்த ஹனுமா விஹாரிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு வாய்ப்பு வழங்கியது சரிதான் என்றாலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது.

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் விளையாடவில்லை என்ற காரணத்தை பி.சி.சி.ஐ வெளியிட்டு இருந்தது. அதன்படி போட்டிக்கு முன்னர் வயிற்று வலியினால் ஷ்ரேயாஸ் அவதிப்பட்டதன் காரணமாகவே இந்த இரண்டாவது போட்டியில் அவர் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்தது. ஆனால் நிர்வாகத்தின் இந்த கருத்தினை ரசிகர்கள் தற்போது இணையத்தில் பெரிதளவு கலாய்த்து வருகின்றனர்.

vihari

ஏனெனில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்திய வீரர்கள் கலந்து கொண்டு நடனமாடிய சில வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதில் இந்திய வீரர்களுடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயரும் விடியவிடிய நடனமாடி புத்தாண்டை கொண்டாடியுள்ளார். அப்படி இருந்த வேளையில் அடுத்த இரண்டாம் நாளே எவ்வாறு அவர் வயிறு வலியால் பாதிக்கப்பட்டு இருப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : அஷ்வினை நக்கலடித்த தெ.ஆ கேப்டன். திருப்பி பதிலடியை கொடுத்து மூக்குடைத்த தமிழன் – தரமான சம்பவம்

எப்படி எல்லாம் கதை சொல்லறீங்க என்கிற வாக்கில் நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு பிசிசிஐ-யை விமர்சித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த விஹாரி இந்த இரண்டாவது போட்டியின் முதல் இனிங்ஸில் 20 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement