அஷ்வினை நக்கலடித்த தெ.ஆ கேப்டன். திருப்பி பதிலடியை கொடுத்து மூக்குடைத்த தமிழன் – தரமான சம்பவம்

elgar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் நேற்று முதல் இன்னிங்சின் போது மிகப் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்தது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததன் காரணமாக இந்திய அணி 100 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஒரு கட்டத்தில் இந்திய அணி 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தபோது 7-வது வீரராக தமிழக வீரர் அஷ்வின் களம் புகுந்தார். ரிஷப் பண்ட் உடன் இணைந்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்க போராடிய அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Ashwin 1

- Advertisement -

நன்றாக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில் பின் வரிசையில் உள்ள பவுலர்களுடன் இணைந்து இந்திய அணியை 200 ரன்களை கடக்க அஷ்வின் உதவினார் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் இந்திய வீரர்கள் அனைவரும் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய மிகவும் சிரமப்பட்ட வேலையில் அஷ்வின் மிகவும் எளிதாக பேட்டிங் செய்து அசத்தினார்.

50 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் குவித்து இந்திய அணியை ஓரளவுக்கு டீசன்டான ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த பங்களிப்பு நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியுள்ளது என்று கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு அஷ்வின் தனது பேட்டால் சரியான பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

Ashwin-3

ஏனெனில் இந்த தென்னாப்பிரிக்க தொடர் துவங்குவதற்கு முன்னதாக பேட்டியளித்த தெ.ஆ கேப்டன் டீன் எல்கர் : அஷ்வின் சிறந்த பந்து வீச்சாளர் தான். ஆனால் தென்னாப்பிரிக்க மண்ணில் அவரால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. அவரால் இங்கு பெரிய அளவில் சக்ஸஸாக முடியாது என்று தெரிவித்திருந்தார். முழுவதும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் ஒரு ஸ்பின்னராக அவரால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் இப்படி கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சரிந்த டாப் ஆர்டர். தாங்கிப்பிடித்த தமிழக வீரர் அஷ்வின் – ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அசத்தல்

அதற்கு பதிலடி தரும் விதமாக முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், இந்த முக்கியமான 2-வது டெஸ்ட் போட்டியில் தனது பேட்டிங்கின் மூலம் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். தான் ஒரு முழுநேர சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் தன்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை இந்த சிறப்பான இன்னிங்சின் மூலம் அஷ்வின் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement