கடந்த ஆண்டு தோனியை சந்தித்த போது அவர் எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான் – ஷஷாங்க் சிங் பேட்டி

Shashank
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் அந்த அணியை சேர்ந்த ஒரு சில வீரர்களின் பிரமாதமான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. அந்த வகையில் நடைபெற்ற முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஷஷாங்க் சிங்கின் அதிரடியான ஆட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் 33 வயதான அவருக்கு பலரது மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்திருந்தது.

தோனி கொடுத்த அட்வைஸ் இதுதான் :

அதனை தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் அணி தக்கவைத்த இரண்டு வீரர்களின் ஒருவராக ஷஷாங்க் சிங்கும் இருந்தார். அந்த அளவிற்கு அவர் கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியின் நிர்வாகத்திடமும் நம்பிக்கையை பெற்றார். கடந்த ஆண்டு மட்டும் 44 ரன்கள் சராசரியுடனும், 164 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 354 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் போது சிறப்பாக விளையாடியது குறித்தும், தோனி அவருக்கு வழங்கிய அறிவுரை குறித்தும் அவர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு ஒருமுறை நான் தோனியை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பினிஷராக இருப்பது குறித்து நிறைய சந்தேகங்களை அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

அந்த நேரத்தில் தோனி எனக்கு கூறிய அறிவுரை இதுதான். அதாவது “நீ விளையாடும் 10 போட்டிகளில் உனது அணியை மூன்று முறை வெற்றி பெற வைத்தாலே உலகின் 5 முதல் 10 சிறந்த பினிஷர்களில் நீயும் ஒருவராய் இருப்பாய்” என்று கூறியிருந்தார். அவர்கூறிய அந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு தன்னம்பிக்கை அளித்தது.

- Advertisement -

அதாவது நாம் விளையாடும் போட்டிகள் அனைத்திலுமே நம்மால் வெற்றிபெற முடியாது என்கிற உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேன். அதேவேளையில் அணிக்காக கடைசி நேரத்தில் நின்று போட்டியை முடிக்கும் போது எந்தளவு நிதானத்துடன் இருக்க வேண்டும் எவ்வாறு சூழலை அணுக வேண்டும் என்று கூறிய அவரது நுணுக்கங்கள் எல்லாம் கருத்தில் வைத்துக் கொண்டுதான் பயிற்சி மேற்கொண்டேன்.

இதையும் படிங்க : அந்த அணிக்காக விளையாடியதுதான் ஏ.பி.டி செய்த மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர்

அந்த வகையில் கடந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது. இந்த ஐபிஎல் தொடரிலும் நான் அதே ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் இன்னும் புதிய பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் சந்திக்கவில்லை ஆனாலும் அவருடன் தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த ஆண்டு அவரது தலைமையில் இன்னும் என்னுடைய பேட்டிங் மெருகேறும் என ஷஷாங்க் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement