தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஏபிடி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி மிகப்பெரிய வீரராக திகழ்ந்தார். ஆனாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் நிறைய தவறுகளை செய்து விட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார்.
அந்த அணிக்காக விளையாடியது தான் தவறு :
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது ஆர்.சி.பி அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். அதனை தொடர்ந்து அந்த அணியின் முதுகெலும்பாக இருந்த அவர் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்துள்ளார்.
ஆர்.சி.பி அணிக்காக 11 சீசன்களில் விளையாடிய டிவில்லியர்ஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் போது பெங்களூரு அணிக்காக விளையாட முடிவு செய்ததுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஏ.பி.டி வில்லியர்ஸ் சிறப்பான வீரராக தான் இருந்தார். அவர் சிறப்பாக விளையாடும் போது பெருமளவு தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 50 ரன்கள் சராசரி உடனும், ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பான வீரராகவும் திகழ்ந்தார்.
ஆனால் ஐபிஎல் தொடரின் டி20 போட்டிகளில் பொருத்தமிட்டில் அவருடைய உண்மையான திறனுக்கு ஏற்ப சரியாக பயன்படுத்தப்படவில்லை. இதை சொல்வதற்கு என்னை மன்னித்துக்கொள்வோம். ஏனெனில் அவர் தவறான அணியில் விளையாடி விட்டார் என்பதே எனது கருத்து.
இதையும் படிங்க : பும்ரா மற்றும் ஷமி ஆடமாட்டாங்க.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவர்தான் ஆடுவாரு – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
அவர் மட்டும் ஐ.பி.எல் போட்டிகளில் வேறு ஒரு அணியில் விளையாடியிருந்தால் அவருடைய மறு முகத்தை பார்த்திருக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



