விராட் கோலியை பாத்து அப்படி சொல்லாதீங்க.. 40 நிமிஷம் எப்படி போச்சுன்னே தெரியல.. மிஸ்ராவுக்கு சஷாங் பதிலடி

Shashank Singh
- Advertisement -

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா சமீபத்திய பேட்டியில் அதிரடியான கருத்துக்களை விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார். குறிப்பாக எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் தமக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்று அவர்கள் விமர்சித்திருந்தார். அதை விட முதல் நாளில் பார்த்தது போலவே ரோஹித் சர்மா இப்போதும் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் தம்முடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்த விராட் கோலி பணம், புகழ், அதிகாரம் வந்ததும் முழுவதும் மாறிவிட்டதாக அமித் மிஸ்ரா ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். சொல்லப்போனால் இப்போதெல்லாம் விராட் கோலி தம்மிடம் பேசுவது கூட இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் கௌதம் கம்பீர் தான் பெரிய இதயத்துடன் தாமாகச் சென்று விராட் கோலியிடம் பேசி பிரச்சினையை முடித்து வைத்ததாக மிஸ்ரா கூறினார்.

- Advertisement -

மிஸ்ராவுக்கு பதிலடி:
அதனால் அதிருப்தியடைந்த விராட் கோலி ரசிகர்கள் இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இப்படி தேவையற்றதை பேசாதீர்கள் என அவருக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் விராட் கோலியை நேரில் சந்தித்து பேசியதாக பஞ்சாப் வீரர் சசாங் சிங் தெரிவித்துள்ளார். அப்போது சுமார் 40 நிமிடங்கள் விராட் கோலி தம்மிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நின்று கொண்டே ஆலோசனைகள் வழங்கியதாக சசாங் சிங் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியின் முடிவில் நின்று கொண்டிருந்த அவரிடம் நானும் நின்று கொண்டு பேசினேன். நாங்கள் சுமார் 40 நிமிடங்கள் நின்று கொண்டே பேசினோம். அந்த 40 நிமிடங்கள் எப்படி சென்றது என்றே எனக்கு தெரியவில்லை. அப்போட்டி முடிந்ததும் நாங்கள் இரவு 12.45 மணிக்கு கிளம்ப வேண்டும். ஆனால் 12.40 வரை நான் விராட் கோலியிடம் பேசிய 40 நிமிடங்கள் எப்படி சென்றது என்று தெரியவில்லை”

- Advertisement -

“அந்த பேச்சுவார்த்தையில் பேட்டிங் டெக்னிக், ஷாட் செலக்சன், மனதளவிலான பலம் போன்றவற்றை விராட் கோலி என்னிடம் பேசினார். அவருடைய பேச்சைப் பார்த்து இவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பது போல் நான் உணர்ந்தேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு நட்பாக பேசி என்னிடம் புரியும்படி விஷயங்களை சொன்னார். மேலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பது பற்றிய அவரது ஆலோசனைகள் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.

இதையும் படிங்க: இளம் வீரர்கள் எங்க போவாங்க.. அந்த உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவது கஷ்டம்.. மிஸ்ரா கருத்து

“அத்துடன் விராட் கோலி எப்போதும் நேர்மறையாக இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சில் நான் புரிந்து கொண்டேன்” என்று கூறினார். அந்த வகையில் பெரிய உச்சத்தை அடைந்தாலும் விராட் கோலி அனைவரிடமும் ஒரே மாதிரியாகவே நடந்து கொண்டு வருகிறார். அதை எடுத்துக்காட்டும் வகையில் பேசிய சசாங் சிங் கருத்து அமித் மிஸ்ராவுக்கு பதிலடி கொடுப்பதாக அமைவது குறிப்பிடத்தக்கது.

Advertisement