தோனி அப்போ சொன்ன டிப்ஸ் தான் இப்போ நான் போட்டியை முடிக்க உதவியது – மனம்திறந்த ஷாருக்கான்

Shahrukh
Advertisement

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அண்மையில் சையது முஷ்டாக் அலி தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. இந்த தொடரில் பல்வேறு மாநில அணிகள் கலந்து கொண்ட வேளையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய அணிகள் இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மோதின. கர்நாடக அணி நிர்ணயித்த 152 ரன்களை இறுதி ஓவரின் கடைசி பந்தில் சேசிங் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் ஷாருக்கான் 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 33 ரன்கள் அடித்து தமிழ்நாடு அணியை வெற்றிபெற வைத்தார்.

Shahrukh

அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்சர் அடித்து பிரமாதமாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். இந்நிலையில் தான் இந்த இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து வெற்றி பெற தோனி கொடுத்த அறிவுரைகள் தான் காரணம் என்றும் அவர் கொடுத்த ஆலோசனைகளை தான் பதட்டம் இல்லாமல் விளையாடி போட்டியை முடித்துக்கொடுக்க காரணம் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரின்போது தோனியிடம் நான் பேசுகையில் ஒரு பினிஷர் ரோல் என்றால் என்ன என்பதை எனக்கு தெளிவாக விளக்கிக் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி களத்தில் நாம் செய்வது தான் சரி என்று நான் நம்பும் அளவிற்கு என்னிடம் எடுத்துக் கூறியிருந்தார்.

shahrukhan

ஏனெனில் ஆட்டத்தின் போக்கை களத்தில் நிற்கும் போது கணிப்பவர் நாம்தான். அதனால் நாம் எவ்வாறு விளையாடப் போகிறோம் என்பதும் இலக்கை விரட்டும் போது நம் மூளைக்குள் என்ன ஓடுகிறது என்பதையும் நாம் தான் சரியாக புரிந்து வைத்துள்ளோம் என தோனி விளக்கிக் கூறியிருந்தார். அவர் கூறிய அறிவுரையின் படியே நான் இறுதிவரை பதட்டமில்லாமல் சேஸிங்கை மனதில் வைத்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் என்று ஷாருக் கான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – தமிழக வீரர் அஷ்வின்

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஷாருக்கான் இம்முறை அதிக விலைக்கு ஏலம் போக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டியை தோனி டிவியில் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement