இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – தமிழக வீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக ஏற்கனவே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்த அஷ்வின் அண்மையில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை டி20 தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி தற்போது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றும் ஒரு சாதனையை நிகழ்த்தி ஜாம்பவான் அந்தஸ்தைப் பெற ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு அருமையான வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியில் கிடைத்துள்ளது.

Ashwin

- Advertisement -

அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கின் மிகப்பெரிய ரெக்கார்டு ஒன்றினை அஷ்வின் இந்த முதல் போட்டியில் தகர்க்க காத்திருக்கிறார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

அவர்கள் இருவரை தொடர்ந்து ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தல் உள்ளார். இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் இந்த அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடித்து முன்னேற அஷ்வினுக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

Ashwin-Harbhajan

இதுவரை இந்திய அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அஷ்வின் 413 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். மேலும் அவர் இந்த போட்டியில் 5 விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி ஜாம்பவான் பட்டியலில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ரொம்ப பெருமையா இருக்கு. ஆனா இதை மட்டும் மறந்துடாத – அறிமுக வீரர் ஷ்ரேயாஸ்ஸை வாழ்த்திய பாண்டிங்

இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் அஷ்வின் வெறும் 79 போட்டிகளிலேயே 413 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதால் இனிவருங்காலத்தில் அவர் மேலும் 200 விக்கெட்டுகளை கூட வீழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement