ரொம்ப பெருமையா இருக்கு. ஆனா இதை மட்டும் மறந்துடாத – அறிமுக வீரர் ஷ்ரேயாஸ்ஸை வாழ்த்திய பாண்டிங்

Iyer-2

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கான்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய தற்போது இந்திய அணியானது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக களம் இறங்கியுள்ளார். விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருப்பதன் காரணமாக இந்த அறிமுக வாய்ப்பானது ஷ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்துள்ளது.

iyer 1

இந்திய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 303-வது வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக தொப்பியினை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கையில் பெற்றுக்கொண்டார். அந்த நிகழ்வினை வீடியோவாக எடுத்து பிசிசிஐ தற்போது தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த விடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த அறிமுகத்திற்கு பல்வேறு வீரர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயரை பாராட்டியுள்ள ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாகவே நீங்கள் எவ்வாறு உழைத்து வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். எனவே நிச்சயம் இந்த வாய்ப்புக்கு தகுதியான ஒரு நபர் தான்.

அதுமட்டுமின்றி இது டெஸ்ட் கரியரில் உங்களது ஆரம்பம் தான் அதை மறந்து விடாதீர்கள் இன்னும் நிறைய தூரம் நீங்கள் பயணிக்க வேண்டி உள்ளது. உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது என்றும் ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். டெல்லி அணிக்காக ஐ.பி.எல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் பாண்டிங் கீழ் ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அறிமுக தொப்பியை யாரிடம் இருந்து வாங்கியிருக்காரு பாருங்க – ராசியான நபர்தான்

இந்த தொடரில் ஏற்கனவே டி20 போட்டிகளின்போது அறிமுகமான ஹர்ஷல் பட்டேலுக்கு முன்னாள் வீரர் அஜித் அகர்கர் அறிமுக தொப்பியினை வழங்கிய நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியின் டெஸ்ட் அறிமுக தொப்பியை முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் வழங்கியுள்ளது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement