ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அறிமுக தொப்பியை யாரிடம் இருந்து வாங்கியிருக்காரு பாருங்க – ராசியான நபர்தான்

Iyer

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய தற்போது இந்திய அணியானது தேநீர் இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் 52 ரன்களையும், ரஹானே 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

gill

தற்போது அறிமுக வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தாலும் டெஸ்ட் வாய்ப்பினைப் பெற கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.

- Advertisement -

இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு அறிமுக வீரராக களமிறங்க தயாராக இருந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியின் அறிமுக டெஸ்ட் கேப்பினை முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் வழங்கினார். அதன்மூலம் 303-வது இந்திய கிரிக்கெட் வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகியுள்ளார்.

iyer 1

- Advertisement -

முதல் தரப் போட்டிகளில் 54 போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 4592 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுனில் கவாஸ்கரிடமிருந்து அறிமுக தொப்பியை பெற்ற மகிழ்ச்சியில் தனது தொப்பியை முத்தமிட்டும் மற்ற வீரர்களை கட்டி அணைத்தும் ஷ்ரேயாஸ் ஐயர் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : இந்த போட்டியில் இந்திய அணி இவங்க 2 பேர் இல்லாம எப்படி ஜெயிக்கபோறாங்களோ? – இயான் ஸ்மித் ஓபன்டாக்

இது குறித்த வீடியோவை தற்போது பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அந்த விடியோவானது ராசிகர்களிடையே வைரலா கிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement