இந்த போட்டியில் இந்திய அணி இவங்க 2 பேர் இல்லாம எப்படி ஜெயிக்கபோறாங்களோ? – இயான் ஸ்மித் ஓபன்டாக்

Ian-smith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி தற்போது கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று துவங்கிய இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே டாஸில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது உணவு இடைவேளை வரை 82 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறிவரும் வேளையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான இயன் ஸ்மித் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாதது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

அவர்கள் இருவரது வெற்றிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமானது முதல் தொடர்ச்சியாக விளையாடி வரும் அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு முக்கிய வீரர்களாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய முதல் டெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவரும் விளையாடாதது நியூசிலாந்து அணிக்கு சற்று சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.

Rohith

இவர்கள் இருவரும் இன்றி இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பதை பார்க்க தான் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை இழக்காமல் விளையாடி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமில்ல இன்னொரு வீரரும் இன்னைக்கு அறிமுகமாகி இருக்காரு – யார் அவர் தெரியுமா?

இவ்வேளையில் இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது அதோடு விராட் கோலியும் முதல் போட்டியில் ஓய்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement