இவங்க 2 பேருக்கு கீழ் விளையாடுவது எனக்கு ரொம்ப ஹேப்பி. இவ்ளோ தொகையை நான் எதிர்பாக்கல – ஷாருக்கான் பேட்டி

Sharukh

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இதுவரை 13 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசனுக்காக வீரர்களின் மினி ஏலம் சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு வீரர்களின் விலை மதிப்பு தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களுக்கான மோகம் அதிக அளவில் இருந்தது.

auction-1

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தமிழக அணியின் இளம் வீரரான ஷாருக்கான் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியின் மூலம் ஏலம் எடுக்கப்பட்டார். இதுகுறித்து அவர் முதல்முறையாக பேட்டியளிக்கையில் : இந்த ஐபிஎல் தொடரில் ஏலத்தின் போது நான் மிகவும் பதற்றமாக உணர்கிறேன். ஆனால் தற்போது மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். களத்திற்கு உள்ளே சென்று என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் காண்பிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

என்னை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் போட்டி போடும் போதுதான் நான் சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடி இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் என்றார். மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் தேர்வாவேன் என்று மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. ஆனால் இம்முறை நான் தேர்வு செய்யப்பட்டபோது தமிழக வீரர்கள் அதனை கத்தி கொண்டாடினர்.

sharukh 1

மேலும் எனக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமைந்தது. என் அம்மாவிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது மட்டுமன்றி தமிழக அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் அவரது அறைக்கு என்னை அழைத்து : இது தான் முதல் படி நீ விஜய் ஹசாரே கோப்பையில் கவனத்தைச் செலுத்த வேண்டும். அந்த தொடர் முடிந்த பின்புதான் ஐபிஎல் குறித்து யோசிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார் என்று ஷாருக்கான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

sharukh

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கெயில், கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு கீழ் என்னுடைய பெயர் வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல மடங்கு சவால்களை இந்த ஐபிஎல் தொடரில் நான் எதிர்கொள்ள உள்ளேன், அனைத்திற்கும் தற்போது தயாராகி வருகிறேன். அதிரடி ஆட்டக்காரராக நான் தொடர்ந்து சீராக விளையாடுவது முக்கியம். முழு நம்பிக்கையோடு ஆடவேண்டும் என்று நினைத்துள்ளேன் என்று ஷாருக்கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.